• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

விஜயகாந்துக்கு திமுக திடீர் சமாதான கொடி!

By Staff
|

சென்னை:

விஜயகாந்த்துக்கு சொந்தமான கல்யாண மண்டபம் இப்போதைக்கு இடிக்கப்பட மாட்டாது என்று மத்தியதரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். இதன் மூலம்திமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தை இழுக்க முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை கையகப்படுத்தமத்திய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அப்பகுதியில் கட்டப்படவுள்ள மேம்பாலத்திற்குத் தேவையானநிலத்தை கையகப்படுத்தவே இந்த நடவடிக்கை என பாலு தெரிவித்திருந்தார்.

ஆனால் தனது மண்டபத்தை வேண்டும் என்றே இடிக்க திமுகவினர் முயற்சிக்கிறார்கள். திமுகவின் தூண்டுதலின்காரணமாகவே பாலு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விஜயகாந்த் குற்றம் சாட்டி வருகிறார். தற்போதுதிமுக கூட்டணியிலிருந்து வைகோ விலகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ள நிலையில் நாயுடு சமூகத்தினரின்வாக்குகளை குறி வைத்து விஜயகாந்த்துடன் சமரசமாகப் போக திமுக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முதல் கட்டமாக விஜய்காந்த்துடன் மோதலுக்கு சுழி போட்ட கல்யாண மண்டப இடிப்பு விஷயத்தில் திமுகவின்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை வெளிப்படுத்தும் வகையில், விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் இப்போதைக்கு இடிக்கப்பட மாட்டாதுஎன டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அதில் விஜயகாந்த்தை சமாதானப்படுத்தும் வகையிலான வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

டி.ஆர்.பாலுவின் அறிக்கை:

விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பர். பிரபலமான நடிகர். அவருடைய திருமண மண்டபத்தை இடிப்பதில்எனக்கோ, எனது துறையைச் சேர்ந்தவர்களுக்கோ எந்தவித உள்நோக்கமும் இருக்க நியாயமில்லை.

கோயம்பேடு மேம்பாலத் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கருதப்படும் நூற்றுக்கணக்கான தனியார்கள், தங்களதுசொத்துக்களைத் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். ஆனால் விஜயகாந்த்தோ, திருமணமண்டபத்துக்குச் சொந்தக்காரரான அவரது மனைவியோ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, கையகப்படுத்தும் இடத்தின் மதிப்பினை உயர்த்தித் தர வேண்டும் என்றுதான் அவரது வழக்கறிஞர்கோரியுள்ளார். இது விஜயகாந்த்துக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

பொதுவாக மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுதான் நிலத்தை கையகப்படுத்தித் தருவது வழக்கம். மத்தியஅரசு கோரும்போது நிலங்களைக் கையகப்படுத்தி மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைக்கும். அதற்காக மாநிலஅரசு செலவிடும் தொகையை மத்திய அரசு வழங்கும்.

எனவே உரிய நஷ்ட ஈடு எவ்வளவு என்பதை மாநில அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள்தான் முடிவுசெய்வார்கள். இதில் மத்திய அரசு எப்படி தலையிட முடியும்? நியாயமான நிலையை விஜயகாந்த்துக்கு மாநிலஅரசின் வருவாய்த்துறை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், திருமண மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டுவதற்கான மாற்றுத் திட்டத்தை விஜயகாந்த்கொடுத்தால் அதை பரிசீலிக்க நான் தயாராகவே இருக்கிறேன். திருமண மண்டபத்தை இடிக்கும் எண்ணம்இப்போதைக்கு இல்லை என்று டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபத்தை நிச்சயம் இடிப்போம் என தீர்மானமாக கூறி வந்த டி.ஆர்.பாலு திடீரென இப்போதைக்குஇடிக்க மாட்டோம் என்றும், இந்தப் பிரச்சினையில் மாநில அரசுதான் சம்பந்தப்பட்டுள்ளது என்று பழியைமாற்றியுள்ளதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறுவது உறுதி என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தெலுங்குபேசும் மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள விஜயகாந்த்தை வளைக்க திமுக முயலுகிறதா என்ற கேள்விஎழுந்துள்ளது.

திருமண மண்டப இடிப்பு குறித்து மறுபரீசலனை செய்யத் தயார் என பாலு இறங்கி வந்துள்ளதும் இந்தசந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

வைகோவால் இழக்கும் தெலுங்கு வாக்குகளை, விஜயகாந்த்தை கொண்டு சரிக்கட்ட திமுக திட்டமிடுகிறதா என்றும்தோன்றுகிறது. ஆனால் திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வரும் விஜயகாந்த்,திமுகவின் இந்த திட்டத்திற்கு வளைந்து கொடுப்பாரா என்று தெரியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X