For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தொகுதி பங்கீடு: போட்டு உடைத்த திருமா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற தகவலை விடுதலைச் சிறுத்தைகள்பொதுச் செயலாளர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

திமுக அணியில் சேர பாமக முலம் கடுமையாக முயன்று வருகிறார் திருமாவளவன்.இருப்பினும், அவரை நேரடியாக அணியில் சேர்க்க கருணாநிதி மறுத்து விட்டார்.வேண்டும் என்றால் பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் சிலவற்றில்திருமாவளவன் கட்சி போட்டியிடலாம் என்று கூறிவிட்டார்.

இதை ஏற்க மறுத்துள்ளார் திருமாவளவன். தங்களையும், பாமகவையும் கருணாநிதிஅவமானப்படுத்தி விட்டார் என அவர் கோபமாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், திமுககூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்ற கருணாநிதி முடிவு செய்துள்ளதாகதெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகள் குறித்த பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டது.அதன்படி திமுக 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

காங்கிரஸுக்கு 40 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். பாமக மற்றும் மதிமுகவுக்கு தலா 22இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்கு 7 இடங்களும் தரப்பட்டுள்ளன.

எங்களுக்கு அங்கு இடம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேற வேண்டும் என கருணாநிதிவிரும்புகிறார். இதன் வெளிப்பாடுதான், பாமக தொகுதிகளை விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கலாம் என்ற பேச்சு.

மதிமுக தங்களுடன்தான் இருக்கும் என்பது உறுதியாகி விட்டதால், பாமகவைப் பற்றிகருணாநிதி கவலைப்படவில்லை. வெளியேறினால் வெளியேறட்டும் என்ற எண்ணம்அவருக்கு வந்து விட்டது.

நாங்கள் எப்படிப் போட்டியிட்டாலும், எங்களுக்கென்று ஒதுக்கப்படும்சின்னத்தில்தான் போட்டியிடுவோம். எங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்தேவை. அதுதான் எங்களது லட்சியம்.

மதிமுக வராமல் போனால், பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை உடன் வைத்துக்கொள்ளலாம் என்று கருணாநிதி நினைத்திருந்தார். ஆனால் மதிமுக மீண்டும் வந்துவிட்டதால் எங்களை வேண்டாம் என்று அவர் முடிவு கட்டி விட்டார்.

அதனால்தான் உள் ஒதுக்கீடு என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார்.

பாமகவை கருணாநிதி குறைத்து மதிப்பிட்டு விட்டார். வன்னியர்களும், தாழ்த்தப்பட்டமக்களும் சேரக் கூடாது, ஒரே அணியில் இருக்கக் கூடாது என்பதுதான் கருணாநிதியின்எண்ணம் என நான் நினைக்கிறேன்.

மேலும் உள் ஒதுக்கீடு என்று கூறியுள்ளதன் மூலம், பாமகவுக்கும், விடுதலைச்சிறுத்தைகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும், மோதல் ஏற்படும் என்று நினைக்கிறார்கருணாநிதி. அப்படி நடந்தால் அதனால் தனக்கே கூடுதல் பலம் என்றும் அவர்நம்புகிறார்.

ராமதாஸ் துணிச்சலாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். அவரது தலைமையில்தமிழகத்தில் மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். அதற்கான காலம்கணிந்துள்ளது. இதை நழுவ விடக் கூடாது. ராமதாஸ் துணிந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் உறவைத் தொடருவது இனியும் முறையாக இருக்காது.

ஒருவேளை வெளியே வர முடியாவிட்டால்,வெளிப்படையாக அதை அவர்சொல்லட்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் நட்புணர்வு தொடர வேண்டும்என்பதை அவரே சொல்லட்டும். அப்படிச் சொன்னால் தேர்தலில் நாங்கள் நிற்காமல்,பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களது வேட்பாளர்களின் வெற்றிக்காகபாடுபடத் தயாராக உள்ளோம்.

இனியும் எங்களுக்காக ராமதாஸ் சிரமப்பட வேண்டாம். விடுதலைச் சிறுத்தைகளைசேருங்கள் என்று திமுகவிடம் கெஞ்ச வேண்டாம். எங்களுக்காக தர்மசங்கடத்தைசந்திக்க வேண்டாம்.

அதிமுகவிலிருந்து கூட்டணி தொடர்பாக யாரும் அழைக்கவில்லை. அப்படியேஅழைப்பு வந்தால் அதைப் பரிசீலிப்போம். ஏன் வரவில்லை என்பது எனக்குத்தெரியாது.

மாற்று அணி அமைக்கும் வாய்ப்பு முன்பு பாமகவுக்கும், மதிமுகவுக்கும் ஏற்பட்டது.ஆனால் இருவரும் அதை நழுவ விட்டு விட்டனர். இப்போது கூட காலம் போய்விடவில்லை என்றுதான் கூறுகிறோம். மாற்று அணி அமைந்தால் அதில் சிலஇயக்கங்களை சேருமாறு அழைப்போம்.

விஜயகாந்த் குறித்து கூற விரும்பவில்லை. அவர் என் வழி தனி வழி என்று கூறிவிட்டார்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X