For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுகவுக்கு 22 சீட் தான்-கருணாநிதி: இருந்தால் இருக்கலாம்.. போனால் போகலாம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

மதிமுகவுக்கு 22 தொகுதிகளைத் தர திமுக ஒப்புக் கொண்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்தார். ஆனால், வைகோ 25தொகுதிகளைக் கேட்டு வருவதாகவும், 22 மேல் தர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

திருச்சியில் திமுகவின் 9வது மாநில மாநாடு இன்று மாலை தொடங்கியது.இதையொட்டி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.

பொதுக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை இன்னும்இறுதியாக முடிவாகாத நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்க எனக்கு பொதுக் குழு அதிகாரம் வழங்கியிருக்கிறது.

கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் வருவார்கள்என்று எதிர்பார்க்கிறேன். மாநாடு முடிந்ததும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடரும். 6ம் தேதி என்னுடன் பேசவருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறியுள்ளார்கள்.

மதிமுகவுடன் நாங்கள் பேசுவது குறித்து பல்வேறு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் வெளி வருகின்றன. மற்ற கட்சிகளுடன்பேசும்போது பேச்சு பற்றி தவறான தகவல்கள் வெளியானால் அந்தக் கட்சித் தலைவர்கள் உடனடியாக மறுத்து அறிக்கைவெளியிட்டு வருகிறார்கள். ஆனால், மதிமுகவுக்கு தரப்படப் போகும் தொகுதி எண்ணிக்கை பற்றி தவறான செய்திவெளியானால் எந்த மறுப்பு அறிக்கையும் அவர்களால் கொடுக்கப்படுவதில்லை.

மதிமுகவுக்கு 16 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட இருப்பதாக அர்பத்தனமான பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதுஅண்டப் புளு, ஆகாசப் புளுகு. நாங்கள் மதிமுகவுக்கு 22 தொகுதிகள் வரை தருவதாகக் கூறியிருக்கிறோம்.

முதலில் 20 தொகுதிகள் தருவதாக பேசினேம். பிறகு 21 தர ஒப்புக் கொண்டோம். நேற்று வைகோ என்னுடன் தொலைபேசியில்பேசினார். இதையடுத்து 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், வைகோ 25 தொகுதிகளை கேட்கிறார். 22க்கு மேல்ஒரு சீட் கூட தர இயலாத நிலையில் தான் திமுக உள்ளது. அதை அவரிடம் தெளிவாகவே சொல்லிவிட்டோம் என்றார்.

கூட்டணியில் மதிமுக தொடருமா என்று கேட்டதற்கு, 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடரும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் வைகோவின் கட்-அவுட்களை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது உண்மையல்ல.பந்தல்காரர்கள் தெரியாமல் வரிசைப்படி வைக்கமல் கட்-அவுட்களை மாற்றி வைத்தார்கள். அதை பின்னர் திமுக, காங்கிரஸ்,பாமக, மதிமுக என்ற வரிசைப்படி வைத்தோம். வைகோ மாநாட்டுக்கு வராவிட்டாலும் கூட அவருடைய கட்-அவுட்அப்படியே தான் இருக்கும் என்றார்.

குறைந்த தொகுதிகளில் திமுக போட்டியிட்டால் கூட்டணி ஆட்சி வரும் என்ற பயம் மக்களுக்கு வராதா என்று கேட்டதற்கு,

எங்கள் பயமும் அது தான். மணிமேகலை அட்சய பாத்திரம் போல் தொகுதிகள் அள்ள அள்ள வராது. இதனால் இருக்கிறதொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

130 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று கேட்டதற்கு, அதை இப்போது செல்ல முடியாது என்றார் கருணாநிதி.

ஜெ விலக திமுக கோரிக்கை

முன்னதாக கருணாநிதி தலைமையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. தீர்மானங்களை பொருளாளர்ஆற்காடு வீராசாமி படித்தார்.

அதன் விவரம்: சிறுசேரி நில பேர ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த நில விற்பனைதொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது.

எனவே ஊழல் மற்றும் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகிறது. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும்என ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கருணாநிதிக்கு அதிகாரம்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், கால அவகசாம் குறைவாக இருப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாகஇறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கருணாநிதியிடம் வழங்கும் வகையிலான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

உளவுத்துறை மீது நடவடிக்கை:

சில அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறையினர் ஆகியோர் துணையோடு, திமுக கூட்டணி தொடர்பாக ஆட்சியாளர்கள் வேண்டும்என்றே வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இதன் மூலம் தமிழகத்தில் பதற்றமான நிலையை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக தெரிய வந்துள்ளதால், இந்த அதிகாரிகள் மீது தேர்தல் ஆணைம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X