கூட்டம் கூட்ட குத்தாட்டம் நடத்தும் அதிமுக
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக கூட்டங்களில் இளம்பெண்களின் அரைகுறை டிரஸ் கவர்ச்சிஆட்டம் இடம்பெறுவதால் அக்கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரக் கூட்டங்கள், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கூட்டம், அதிமுகஅரசின் சாதனை விளக்கக் கூட்டம் என்ற பெயரில் பல்வேறு பொதுக் கூட்டங்களுக்கு அக் கட்சி ஏற்பாடு செய்துநடத்தி வருகிறது.இந்தக் கூட்டங்களுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. அமைச்சர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டங்களுக்கு கூட்டம் எக்குத் தப்பாக வருவதில் ஆச்சரியம் இல்லை, காரணம், கூட்டம்ஆரம்பிப்பதற்கு முன்பாக நடக்கும் குத்தாட்டம்தான்!.
இந்தக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாக இசைக் கச்சேரி என்ற பெயரில் இசைக் குழுவினர்ஜெயலலிதாவைப் புகழ்ந்தும் கருணாநிதியைக் குத்தியும் பாடல்களைப் பாடுகின்றனர்.
அப்படியே பாடல்கள் குறைந்து, ஆடல் நிகழ்ச்சிகள்ஆரம்பாகின்றன.
ஆடல் என்றால் சும்மா ஆட்டம் இல்லை, குட்டை பாவாடை, சின்ன ஜாக்கெட் அணிந்து கொண்டு, கருப்புஉதடுகளில் சிவப்பு லிப்ஸ்டிக்கை பெயிண்ட் மாதி அடித்துக் கொண்டு, உடம்பை சுற்றிச் சுற்றி அவர்கள் ஆடும்ஆட்டத்தைக் காண கூட்டம் அலை மோதுகிறது.
இந்த பொஷிசனில் இருந்து பார்த்தால் நல்ல வியூ கிடைக்கிறது, இங்கிருந்து பார்த்தா நல்லா இருக்கு என்றுபெரிசுகளும் சிறுசுகளுமாக வேன்டேஜ் பொசிஷன் எடுத்துக் கொண்டு கூட்டத்தை ரசிக்கின்றனர்.
மரத்துல ஏறுனா நல்லா தெரியுது என்று அங்கேயும் ஏறி விடுகின்றனர். இதனால் அதிமுக கூட்டங்களுக்குதரையில் மட்டுமல்ல மரங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எல்.ஆர்.ஈஸ்வரியின் காதுகளை பஞ்சராக்கும் ரக பாடல்களுக்குத்தான் இந்த லோக்கல் அழகிகள் போடும்ஆட்டத்துக்கு கூட்டமோ கூட்டம்.
சமீபத்தில் ஆறுமுகநேரி என்ற இடத்தில் இப்படி ஒரு குத்துப் பாட்டு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். கூட்டத்திற்கு முன்பாக நடந்த குத்தாட்ட நிகழ்ச்சியை அவரும்தொண்டர்களோடு சேர்ந்து தொடை தட்டி ரசித்தார்.
இந்த கும்தலக்கா ஆட்டம் காரணமாகவும் அதைப் பார்த்து ஆண்கள் காட்டும் வக்கிர சிக்னல்கள் காரணமாகவும்பெண்கள் கூட்டம் மிகவும் கம்மியாகவே வருகிறது.
அதிகவின் இந்த நூதன ஐடியாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதால் அத்தனை அதிமுக கூட்டங்களிலும்,முன்னோட்டமாக குத்துப் பாட்டுக்கு ஏற்பாடு செய்கிறார்களாம்.
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம், சுகம், சுகம்...!
வாழ்க கும்தலக்கா.. ஸாரி, அதிமுக...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications