அதிமுகவுடன் கூட்டணி வரலாம்: திருநாவுக்கரசர்
நாகப்பட்டனம்:
அதிமுக, பாஜக இடையே இப்போதைக்கு அரசியல் உறவுகள் இல்லாவிட்டாலும் கூட, சட்டசபைத்தேர்தலையொட்டி கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்று முன்னாள் மத்தியஅமைச்சரும், பாஜக எம்.பியுமான எஸ். திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசுகையில், தற்போதையமுடிவுப்படி, சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதுதான் பாஜகவின் நிலை. இருப்பினும்எதிர்காலத்தில் இதில் மாற்றம் ஏற்படாது என்று உறுதியாகக் கூற முடியாது.அதிமுகவுடன் நமக்கு இப்போது அரசியல் ரீதியாக உறவு இல்லாவிட்டாலும் கூட, எதிர்காலத்திலும் இதே நிலைநீடிக்கும் என கூற முடியாது. கூட்டணி ஏற்படலாம்.
பிரசாரம் செய்வதற்கான கால அவகாசத்தை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைப்பதைக் குறைக்க முடியும். தேர்தல் செலவுகளிலிருந்துதான்ஊழலும், லஞ்சம் உருவாகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் கனவு இருக்கும். புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்களுக்கு முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். அதே கனவுதான் இப்போது விஜயகாந்த்துக்கும் இருக்கிறது என்றார்திருநாவுக்கரசர்.
தனித்து போட்டி:
இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக அணியில் சேராமல் தனித்துப் போட்டியிடுவது என கடந்த இரு நாட்களாக நடந்த தமிழக பாஜக நிர்வாகிகள்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிடுவது எனதீர்மானிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மூன்றாவதுஅணி என்று கூற முடியாது. தனது சொந்த பலத்தில்தான் இத்தேர்தலை பாஜக சந்திக்கப் போகிறது.
பொடா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதற்கு வாஜ்பாய் அரசுதான் காரணம் என்று வைகோ கூறியிருப்பது மிகப் பெரிய ஜோக். மதிமுக, அதிமுகஇடையே ஏற்பட்டுள்ள கூட்டணியால் இரு கட்சித் தொண்டர்களிடையே மந்தமான நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
விஜய்காந்துடன் கூட்டணி அமைக்க முயல்வீர்களா என்று கேட்டபோது,சுப்பிரமணியம சுவாமியுடன் கூட்டணி அமைப்போம் என்றார் வெங்கையா.
வெங்கையா இப்படிக் கூறினாலும் அதிமுக கூட்டணிக்கு பாஜக தனி டிராக்கில்முயற்சித்துக் கொண்டு தான் உள்ளது.
விஜய்காந்துடன் முயன்று பார்த்துவிட்டு, கூட்டணி அமையாததால் விலகிவிட்டதுபாஜக.
இ.கம்யூ வரப்டாது:தவமாய் தவமிருக்கும் பாஜக
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications