For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.50 லட்சம் வாங்கிய திமுக: நாஞ்சில் திடுக்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டஎல்.கணேசனுக்காக பிரசாரம் செய்ய திமுகவினர் ரூ. 50 லட்சம் பணம் வாங்கினார்கள்என்று மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பரபரப்புகுற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அதிமுகவுடன்தான் மதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலேவலியுறுத்திப் பேசி வந்தவர் சம்பத். இதற்காக திமுகவின் கடும் கண்டனத்தையும்,வைகோவிடம் வசவும் வாங்கினார்.

இதனால் மனம் சோர்ந்திருந்த சம்பத், அதிமுக-மதிமுக இடையே கூட்டணிஏற்பட்டுள்ளதால் உற்சாகமடைந்து மறுபடியும் டூர் கிளம்பி விட்டார்.

மதுரை, கீரைத்துறை பகுதியில் நடந்த மதிமுக கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்பேசுகையில், பொடாவை விட மிக மோசமானது மிசா சட்டம். பேச்சுரிமை,எழுத்துரிமை என எல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்ட மிசா சட்டத்தைக்கொண்டு வந்த இந்திரா காந்தியுடன் கருணாநிதி கூட்டணி வைத்துக் கொண்டார்.

பண்டாரம், பரதேசி கட்சி என்று கூறிய பாஜகவுடன் பதவிக்காக கூட்டணி வைத்துக்கொண்டார். எனவே அதிமுகவுடன், மதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதைவிமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை.

அவருக்கேற்ற வகையில் பிரச்சினைகளை திசை திருப்பதுவது கருணாநிதியின்வாடிக்கைதான். ஆனால் இம்முறை அது மக்களிடம் எடுபடாது.

ஒருவேளை திமுக கூட்டணியில் மதிமுக நீடித்திருந்தாலும், திமுகவினர் உள்ளடிவேலை செய்து மதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து விடுவார்கள். முறையாகபிரசாரம் செய்ய மாட்டார்கள்.

கடந்த திருச்சி நாடாளுமன்றத் தேர்தலிலேயே, எல்.கணேசனுக்கு பிரசாரம்செய்வதற்காக ரூ. 50 லட்சம் பணத்தைப் பெற்றவர்கள்தான் திமுகவினர்.

மதிமுகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவே பணம் வாங்குபவர்கள்தான் திமுகவினர்.ஆனால் அதிமுக அப்படி இல்லை. (இவர்கள் பிரச்சாரத்தோடு காசும் தருவார்களோ?)

இப்போதே இரு கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன், ஒற்றுமையாக செயல்படஆரம்பித்து விட்டார்கள். சகோதர உணர்வுடன் இரு கட்சியினரும் தேர்தல் பணிகளைத்தொடங்கி விட்டனர் என்றார் சம்பத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X