• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காங்-48, மார்க்சிஸ்ட்-13, இ.யூ.முஸ்லீம் லீக் 3: திமுக தொகுதி உடன்பாடு

By Staff
|

சென்னை:

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தங்களில் திமுக தலைவர் கருணாநிதியும் அந்தக் கட்சிகளின்தலைவர்களும் இன்று கையெழுத்திட்டனர்.

மதிமுக விலகிவிட்ட நிலையில் திமுக கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும்கூடுதல் தொகுதிகளை போட்டுக் கொடுக்குமாறு கோரி வந்தன. ஆனால் மதிமுகஇருந்தபோது என்ன அடிப்படையில் பேசியதோ, அதை அடிப்படையிலேயேதொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசியது திமுக.

இதனால் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்தன. இதையடுத்து திமுகவும் விட்டுத்தந்தது.

ஆனாலும் சசிகலா மூலமாக அதிமுகவுடன் உறவு கொண்டாடி வரும் தா.பாண்டியன்மாநிலச் செயலாளராக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 10 தொகுதிகள்மட்டுமே ஒதுக்கியது. படு அதிருப்தியுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளதுஇ.கம்யூனிஸ்ட்.

அதே போல 50 தொகுதிகளை ஒதுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியும் முரண்டு பிடித்தது.ஆனால் திமுக தரப்பு, 40ல் ஆரம்பித்து அதிகபட்சம் 42 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கமுடியும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று மாலை திடீரென டெல்லிபுறப்பட்டுச் சென்றார். அங்கு மூத்த தலைவர்களுடன் பேசி, 50 தொகுதிகளுக்குக்குறையாமல் பெற்றுத் தர திமுகவுக்கு பிரஷ்ஷர் தருமாறு கோரினார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து கருணாநிதியுடன் பேச்சு நடத்தப்பட்டது.இதையடுத்து 48 தொகுதிகள் தர கருணாநிதி ஒப்புக் கொண்டார்.

இந் நிலையில் கிருஷ்ணசாமி இன்று காலை அவசரமாக சென்னை திரும்பினார்.அவரும் எஸ்ஆர் பாலசுப்பிரமணியம், சுதர்சனம் உள்ள மூத்த தலைவர்களும்அண்ணா அறிவாயலத்தில் இன்று கருணாநிதியை சந்தித்தனர்.

அப்போது காங்கிரசுக்கு 48 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இதையடுத்து இருகட்சியினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, யூகங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு கூட்டணி உடன்பாடுமிக சுமூகமாக முடிந்துள்ளது. எந்தெந்தத் தொகுதிகள் என்பதை இனிமேல் பேசி முடிவு செய்வோம் என்றார்.

மார்க்சிஸ்ட்-13:

அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.

இதற்கான உடன்பாட்டில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜனும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், தொகுதிப் பங்கீடு திருப்தி தருகிறதுஎன்றார்.

இந்திய கம்யூனிஸ்டை ஓரிடம் கூடுதலாக 11 தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சிக்கு 13 இடங்களை அள்ளித் தந்துவிட்டது திமுக.

லீக்குக்கு 3 இடங்கள்:

அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹைதீனும் கருணாநிதியும் இன்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அந்தக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு தனது கட்சியின் பொதுச்செயலாளர் சையச் சத்தாருடன் கருணாநிதியை சந்தித்தார் மொஹைதீன். பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரியுள்ளோம்.கனிவுடன் பரிசீலிப்பதாக கலைஞர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாகநடந்தது என்றார்.

இந் நிலையில் அக் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த மூன்றுதொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே இக் கட்சி போட்டியிடும். அதாவது,திமுக வேட்பாளர்களாகவே அவர்கள் போட்டியிடுவார்கள்.

அதிமுக கூட்டணியில் இரு இஸ்லாமிய கட்சிகளுக்கு மொத்தம் 3 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தற்போது காங்கிரஸ் உள்பட நான்கு கட்சிகளுடனான திமுகவின்தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. பாமக மட்டுமே தற்போது பாக்கி உள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு நாளை காலை முடிவுக்கு வரும். சுமூகமாகவேமுடியும். தொகுதிப் பங்கீடு முடிவடைந்தவுடன் திமுக போட்டியிடும் தொகுதிகளின்எண்ணிக்கை குறித்து தானாகவே தெரிய வரும்.

தொகுதிப் பங்கீட்டில் தியாக மனப்பான்மையுடன் திமுக நடந்து கொண்டுள்ளது.இதற்கு தகுந்த பரிசு கிடைக்கும் என நம்புகிறேன். மத்திய கூட்டணியில் மதிமுகநீடிப்பது குறித்து எனது கருத்தை காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டேன் என்றார்கருணாநிதி.

இதுவரை முடிந்துள்ள தொகுதிப் பங்கீட்டின்படி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகளின் எண்ணிக்கை விவரம்:

காங்கிரஸ் - 48

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 13

இந்திய கம்யூனிஸ்ட் -10

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X