For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயா டிவி, நமது எம்ஜிஆருக்கு அரசு விளம்பரம்: சிபிஐ விசாரணை கோரி மனு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு அதிக அளவில் அரசுவிளம்பரங்கள் கொடுத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வேப்பரசு என்பவர் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்குப்போட்டார்.

அதில், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனதுகுடும்பத்தினர், உறவினர்கள் நடத்தி வரும் சன் டிவி குழுமத்தின் 15 டிவி சேனல்கள்,பத்திரிகைகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவன விளம்பரங்களை அதிகளவில் கொடுத்துரூ. 10 கோடி வரை தனது குடும்பத்தினர், உறவினர்கள் சம்பாதிக்க வழி செய்துகொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தனது மனுவில்கோரியிருந்தார்.

இந் நிலையில் வழக்கறிஞர் திணேஷ் நீலகண்டன் என்பவர் இன்று ஒரு பொது நலமனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சன் டிவிக்கு 46 புள்ளிகள்கிடைத்து முதலிடத்தில் உள்ளது. ஜெயா டிவி வெறும் 5 புள்ளிகளுடன் நான்காவதுஇடத்தில் உள்ளது.

இருப்பினும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள்மேற்பார்வையில் ஜெயா டிவி இயங்குவதால், ஜெயலலிதா தனது அரசு அதிகாரத்தைதவறாகப் பயன்படுத்தி ஏராளமான அரசு விளம்பரங்களை ஜெயா டிவிக்குக்கொடுத்துள்ளார்.

மேலும் வாசகர்களே இல்லாத நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கும் அதிக அளவிலானஅரசு விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் ஜெயலலிதா தனதுஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பது உறுதியாகிறது. ஏராளமான அரசுப் பணம்விரயமாக்கப்பட்டுள்ளது.

எனவே ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு வழங்கப்பட்ட அரசுவிளம்பரங்களின் வருவாய் மூலம் கிடைத்த கணக்கு விவரத்தை இரு நிறுவனங்களும்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுமனுவில் நீலகண்டன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X