For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமக, காங், கம்யூ கேட்கும் தொகுதிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் கொடுத்துள்ள தொகுதி விவரப்பட்டியல் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 48 இடங்களும், பாமகவுக்கு 31 தொகுதிகளும்,மார்க்சிஸ்ட்டுகளுக்கு 13, இந்திய கம்யூனிஸ்டுக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதிகளை ஒதுக்கும் பணியில் தற்போது திமுக தலைவர் கருணாநிதிதீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கு வசதியாக ஒவ்வொரு கட்சியும் தொகுதி விவரப்பட்டியலை அளித்துள்ளன. அந்தப் பட்டியலிலிருந்து அந்தந்த கட்சிகளுக்குஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள்:

ஆர்.கே.நகர், மயிலாப்பூர், பூங்காநகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர்,சோளிங்கர், குடியாத்தம், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு, செங்கம், தண்டாரம்பட்டு,சாத்தான்குளம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி1,குன்னூர், மதுரை மத்திய தொகுதி, மேலூர், தளி, கிருஷ்ணகிரி, கோவை கிழக்கு,நாமக்கல், பள்ளிப்பட்டு, அச்சரப்பாக்கம், உத்திரமேரூர், கடலூர், சிதம்பரம், புவனகிரி,தர்மபுரி, கோவை மேற்கு,

வந்தவாசி, காங்கேயம், பழனி, வெள்ளக்கோவில், குளச்சல், நாகர்கோவில், ஊட்டி,அரவாக்குறிச்சி, சிவகாசி, பாபநாசம், பட்டுக்கோட்டை, மானாமதுரை,தொண்டாமுத்தூர், கடலாடி,

பேராவூரணி, விருதுநகர், வேலூர், ரிஷிவந்தியம், திருவள்ளூர், கரூர், வால்பாறை,ஓசூர், பரமக்குடி, ராதாபுரம், கிள்ளியூர், கம்பம், திருவாடானை, தலைவாசல்,ராமநாதபுரம்.

பாமக கேட்டுள்ள தொகுதிகள்:

பூந்தமல்லி, பூங்காநகர், பெரம்பூர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், செங்கல்பட்டு,தர்மபுரி, ஓசூர், பெண்ணாகரம், நெல்லிக்குப்பம், சிதம்பரம், ஆண்டிமடம், பண்ருட்டி,அச்சிரப்பாக்கம், எடப்பாடி,சேலம் 2, நாட்ராம்பள்ளி, திருப்பத்தூர், கபிலர்மலை, மேட்டூர், திருத்தணி,விருத்தாச்சலம், திண்டிவனம், திருவிடைமருதூர், மேல்மலையனூர், சீர்காழி,பூம்புகார், தாரமங்கலம், மயிலாடுதுறை,

கரூர், கும்மிடிப்பூண்டி, மொடக்குறிச்சி, ராதாபுரம், குத்தாலம், சமயநில்லூர்,செய்யாறு, அரக்கோணம், கோவை மேற்கு, பவானி, நாகர்கோவில், அந்தியூர்,சங்கராபுரம், வந்தவாசி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பட்டியல்:

மதுரை கிழக்கு, திண்டுக்கல், பெரம்பூர், சிங்காநல்லூர், விளவங்கோடு, திருவட்டாறு,திருவாரூர், குடியாத்தம், திருவெறும்பூர், சிதம்பரம், திருப்பூர், வாசுதேவநல்லூர், தளி.

இந்திய கம்யூனிஸ்ட் பட்டியல்:

நன்னிலம், மன்னார்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகங்கை, ஆலங்குடி,திருத்துறைப்பூண்டி,தளி, அவினாசி, பெருந்துறை. (இந்த 10 தொகுதிகளையும்கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என இக்கட்சி கோரியுள்ளது)

சுமார் 12 தொகுதிகளை காங்கிரஸ், பாமக ஆகியவை கேட்டு வருவதால் அந்தத்தொகுதிகளை ஒதுக்குவதில் திமுகவுக்குத் தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதேபோல சென்னை நகரின்முக்கிய தொகுதிகளை காங்கிரஸும், பாமகவும்கேட்பதால் அந்தத் தொகுதிகளில் போட்டியிட நினைத்திருந்த திமுக தர்மசங்கடத்தில்ஆழ்ந்துள்ளது.

அதேபோல பெரம்பூர் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் தங்களுக்கேஒதுக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கோரியுள்ளதிருவெறும்பூர், சிதம்பரம், திருவாரூர் ஆகியவை கடந்த தேர்தலில் திமுக வென்றதொகுதிகள்.

எனவே அவற்றை மார்க்சிஸ்டுகளுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்குத்தான் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் மிகவும்குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அக்கட்சிக்கு அரவாக்குறிச்சி, ராமநாதபுரம்ஆகிய தொகுதிகள் முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு தொகுதியைஒதுக்க வேண்டியுள்ளது.

தொகுதிகள் ஒதுக்கும் பணி முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X