புதுவை கூட்டணி கட்சி தொகுதிகள்-ஜெ அறிவிப்பு: தமிழக தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் அதிமுககூட்டணியில் தொடர்ந்து பெரும் சிக்கல் நீடிக்கிறது.

இதுவரை பாண்டிச்சேரி தொகுதிகளை மட்டுமே அதிமுகவால் முடிவு செய்யமுடிந்துள்ளது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழகத்தில் தொகுதிகள் ஒதுக்குவதில் கடந்தஒரு வார காலமாகவே முடிவெடுக்க முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள்தோன்றியுள்ளன.

இதுவரை 5 சுற்று பேச்சவார்த்தை நடத்தியும் மதிமுகவும், திருமாவும் அதிமுக தரும்தொகுதிகளை ஏற்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்.

இந் நிலையில் திருமாவளவனை கடந்த இரு நாட்களாக அதிமுக தேர்தல் குழு பேசவரச் சொல்லி அழைத்தும் அவர் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தான்கட்சிப் பணியில் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியூர் போய்விட்டார்திருமா.

அதே போல மதிமுக கேட்கும் தொகுதிகளை தருவதிலும் அதிமுக ரொம்பவேயோசிக்கிறது. இதனால் அக் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்உருவாகியுள்ளது.

மேலும் தங்களை நெருக்க வைகோவும் திருமாவும் கூட்டணிக்குள் ஒரு தனிஅணியாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக கோபத்தில் உள்ளது.

ஆனாலும் எதையும் வெளிக்காட்ட இயலாத நிலையில் இரு கட்சிகளுடனும் பேசிவருகிறது.

மதிமுக கேட்கும் தொகுதிகளில் 30 தொகுதிகளைத் தர அதிமுக தயாராக இல்லை.கேட்டதில் 5 மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் சிக்கல் பெரிதாகிவிட்டதால்,தமிழக தொகுதிகளை விட்டுவிட்டு முதலில் பாண்டிச்சேரி தொகுதிகளை ஒதுக்குவதுகுறித்து மதிமுக, திருமாவிடம் அதிமுக பேசி வந்தது. (இதை நாம் காலையிலேயேதெரிவித்தோம்)

இத்தனைக்கும் பாண்டியில் மதிமுக, சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளில் மட்டுமேமதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

புதுவை அதிமுக கூட்டணிக்கு ஜனநாயக மக்கள் கூட்டணி என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கை:

2006, புதுவை மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில அதிமுக தலைமையிலானஜனநாயக மக்கள் கூட்டணியில், இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்போட்டியிடுவது என்பதை அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும், கூட்டணிக்கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் கலந்து ஆலோசித்து எடுத்தமுடிவின்படி,

கீழ்க்கண்ட கட்சிகளுக்கு கீழ்க்காணும் தொகுதிகளை ஒதுக்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்: முத்தியால்பேட்டை, உப்பளம்,உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, மண்ணடிப்பட்டு, ஊசுடு (தனி), உழவர்கரை,தட்டாஞ்சாவடி, ரெட்டியார்பாளையம், லால்பேட்டை, கோட்டுச்சேரி, காரைக்கால்,நரவி-திருப்பட்டினம், மாஹே (கேரளா), பள்ளூர் (கேரளா), ஏனாம் (ஆந்திரா) -மொத்தம் 16 தொகுதிகள்.

கண்ணனின் கட்சி:

கண்ணனின் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

காசுக்கடை, ராஜ்பவன், புஸ்ஸி, தலியார்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம்,குருவிநத்தம், பாகூர் (தனி), வில்லியனூர், காரைக்கால் தெற்கு- மொத்தம் 10தொகுதிகள்.

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:திருபுவனை (தனி), திருநள்ளாறு

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்: ஏம்பலம் (தனி), நெடுங்காடு(தனி) என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு மே 8ம் தேதியும்,மாஹே, ஏனாம், பள்ளூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் மே 3ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.

பாண்டிச்சேரி தொகுதிகளை அறிவித்துவிட்ட அதிமுக தமிழக தொகுதிகள்பட்டியலையும் திமுகவுக்கு முன்பாகவே அறிவிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

இந் நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனையில்அதிமுக ஈடுபடவுள்ளது. அப்போது திருமா கேட்கும் தொகுதிகளை விட்டுத் தந்துதொகுதிப் பட்டியலை அதிமுக இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

அதே போல மதிமுகவிடமும் பேசி சிக்கலைத் தீர்த்துவிட்டால் நாளையே தமிழகஅதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் வெளியிடப்படக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+