கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்: திமுக படுவேகம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்வீரப்ப மொய்லி இன்று சந்தித்து விருப்ப தொகுதிகள் குறித்த பட்டியலை வழங்குவார்என்று தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்தத் தொகுதிகளைஒதுக்குவதற்கு வசதியாக விருப்ப பட்டியலை வழங்குமாறு திமுக கோரியுள்ளது.மற்ற கட்சிகள் அனைத்தும் பட்டியலைத் தந்துவிட்டன. காங்கிரஸில் கோஷ்டிகள்அதிகம் என்பதால் சென்னையில் வைத்து இந்தப் பட்டியலை முடிவு செய்ய முடியாதநிலையில் அக் கட்சி உள்ளது.
இதையடுத்து டெல்லியில் வைத்து தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களுடன்வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பட்டியல்தயாரிக்கப்பட்டு சோனியா காந்தியிடம் காட்டப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை வரும் மொய்லி, தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி உள்ளிட்டோருடன் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியைசந்தித்து தொகுதி விவரப் பட்டியலை வழங்கவுள்ளார்.
மொத்தம் 60 தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி தரவுள்ளது.அதிலிருந்து 48 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்படும். அதே போல பாமக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகியவற்றின் தொகுதிப்பட்டியல்களும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாளை அல்லது நாளை மறுதினமே திமுக கூட்டணிக் கட்சிகள்போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகிவிடும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல்இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். அதன் பின்னர் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
இதற்கிடையே தேர்தலில் சீட் கேட்டு மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட காங்கிரஸார்விண்ணப்பம் அளித்துள்ளனர். விண்ணப்பம் பெறும் பணி முடிவடைந்து விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications