ஆஸ்திரேலியாவில் தங்கம் குவிக்கும் இந்திய வீரர்கள்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வரும் 18 வது காமன் வெல்த் போட்டிகளில் 12 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை இந்தியா அள்ளியுள்ளது. நேற்று மட்டும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 தங்கங்களை வென்றுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து 17 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 39 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
25 மீட்டர் ஏர்-பிஸ்டல் பிரிவில் சரோஜா குமாரி, சுஷ்மா ராணி ஜோடியும், 10 மீட்டர் ஏர்-ரைபில் பெண்கள் பிரிவில் தேஜஸ்வனி சாவத், அவனீத் கவுர் சித் ஜோடியும் தங்க பதக்கங்களை வென்றது.
துப்பாக்கி சுடுதல் போட்டி ஆண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில் அபினவ் பிந்திரா, சுகன் நரங்சிங் ஜோடியும், 25 மீட்டர் "ஸ்டாண்டார்டு பிஸ்டல் பிரிவில் சமரோஷ் சங், ரோணங் பண்டிட் ஜோடியும் தங்க பதக்கம் வென்றது.
ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் விஜயகுமார், பெம்மா தாமங் ஜோடியும், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அபிவன் பிந்திரா, சுகன் நரங்சிங் ஜோடியும் தங்க பதக்கம் வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அறிமுக வீராங்கனையான தேஜஸ்வினி சவுந்த் தங்கம் வென்றார். 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பிரிவில் சமரோஷ் ஜங், ஜஸ்பால் ராண ஜோடி தங்கம் வென்றது.
பெண்களுக்கான பழு தூக்கும் பிரிவில் யாம்னம் ரேணு பால சானு 183 கிலோ பழு தூக்கி தங்க பதக்கம் வென்றார் 48 கிலோ பிரிவில் குஞ்சா ராணி தங்க பதக்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சரத்கமல், சுபாசித் சாகா, சவுமியா தீப் ராய், சிபாஜி தத்தா ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர்.
வெள்ளிகளை குவிந்த வீரர்கள்:
ஆண்களுக்கான பழு தூக்கும் போட்டியில் 56 கிலோ எடைப்பிரிவில் விக்கி பாட்டா 245 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். 77 கிலோ பிரிவில் முகமது ஜாகிர் அசத்துல்லா வெள்ளி வென்றார்.
பளு தூக்குதல் 69 கிலோ பிரிவில் மோனிகா தேவி, அருண் முருகேசன் வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சமரேஷ் ஜங், விவேக் சிங் ஜோடியும்,
துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அஞ்சலி பகவத், அனு ஜங் ஜோடி 1142 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் டபள் ட்டிராப் இரட்டையர் பிரிவில் ரத்தோர் விக்ரம் பட்நாயக் ஜோடி வெள்ளி வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அவ்னீத் கவுர் வெள்ளி பதக்கம் வென்றார்.
வெண்கலம் வென்ற வீரர்கள்:
69 கிலோ பழு தூக்கும் பிரிவில் சுதிர்குமார் சித்ரதுர்கா வெண்கலம் வென்றார்.
பாட்மிட்டன் குழு பிரிவில் செய்னா நேவால், இரண்டடையர் பிரிவில் ஜாவ்லா கட்டா, டிஜூ ஜோடியும், ரூபேஸ்குமார், தாமஸ் ஜோடியும் வெண்கலத்தை கைப்பற்றியது.
இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 12 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து 17 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 39 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என முதலிடத்தில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications