For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு கையெழுத்து!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையேஉடன்பாடு கையெழுத்தானது.

காங்கிரஸ் கட்சிக்கான 48 தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள்நேற்றிரவு தொடங்கியது.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தலைமையிலான திமுக குழுவும் ப.சிதம்பரம்,வாசன், இளங்கோவன் ஆகிய மத்திய அமைச்சர்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவும்விடிய விடிய பேச்சு நடத்தின. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையிலேயே கணிசமானஅளவிலான தொகுதிகள் குறித்து உடன்பாடு ஏற்பட்டுவிட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான வீரப்ப மொய்லிதலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் குழு அண்ணா அறிவாலயத்திற்குநேற்றிரவு எட்டரை மணியளவில் வந்தது.

இந்தக் குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள்ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அன்பரசு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

காங்கிரஸ் குழு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது திமுக தலைவர் கருணாநிதிமற்றும் திமுக தேர்தல் குழுவினர் அக் கட்சியின் சார்பில் போட்டியிட மனுசெய்துள்ளவர்களிடம் நேர்காணலில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் குழுவினர் முரசொலி மாறன் அரங்குக்கு அழைத்துச்செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டனர். பின்னர் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்தலைமையிலான 8 பேர் கொண்ட திமுக குழு அங்கு வந்தது.

இந்தக் குழுவில் மாறன் தவிர ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர்கள்ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, திண்டுக்கல்பெரியசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

பேச்சுவார்த்தையில் முடியப் போகும் தருவாயில் கருணாநிதியும் வந்து கலந்துகொண்டார். மற்ற நேரங்களில் தனது அறையிலேயே அவர் அமர்ந்திருந்தார்.

பேச்சுவார்த்தை விவரங்களை அவ்வப்போது தயாநிதி மாறன் கருணாநிதியிடம்விளக்கிவிட்டு வந்தார்.

இப்படியாக நீடித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நள்ளிரவை நெருங்கியபோது தான்முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த வீரப்ப மொய்லிவெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக இருந்தது. கணிசமான தொகுதிகள்குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகள் என்பதை இப்போதுதெரிவிக்க இயலாது. தொடர்ந்து பேசுவோம் என்றார்.

கருணாநிதி கூறுகையில், பெரும்பாலான தொகுதிகளை முடிவு செய்து விட்டோம்என்றார். கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த முதல் பட்டியல் எப்போதுவெளியாகும் என நிருபர்கள் கேட்டதற்கு, முதல் பட்டியல் என்ன முழுப்பட்டியலையே இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட்டுவிடுவோம். பாமகவுக்கு சிலதொகுதிகள் குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்றார்.

குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளை பாமகவும், காங்கிரஸும் பிடிவாதமாக கோரியதால்இரு கட்சிகளுக்கும் தொகுதிகளை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

வழக்கமாக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடுப் பேச்சுவார்த்தைகள்கருணாநிதி தலைமையில்தான் நடந்து வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில்ஸ்டாலினும் கண்டிப்பாக இடம் பெற்று வந்தார்.

ஆனால் காங்கிரஸ் குழுவினருடனான பேச்சுவார்த்தையை தயாநிதி மாறன்தலைமையிலான திமுக குழு மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையில்ஸ்டாலினும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மாறன் நெருக்கமாக இருப்பதால் அவரையேஅக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் கருணாநிதி இடம் பெறச் செய்ததாகத்தெரிகிறது.

இன்றும் பேச்சு:

இந் நிலையில் 2வது நாளாக இன்றும் திமுகவுடன் வீரப்ப மொய்லி உள்ளிட்டகாங்கிரஸ் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதலில் கருணாநிதி உள்ளிட்டதலைவர்களுடன் ஆலோசனை நடத்திய மொய்லி, பின்னர் கருணாநிதியைதனியாகவும் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும்,தொகுதி உடன்பாட்டில் கையெழுத்துப் போட்டனர்.

ஒப்பந்தத்திற்குப் பின்னர் வெளியில் வந்த வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம்பேசுகையில், இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்துப் பேசினோம், இதன் மூலம்சுமூகமான முறையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்றார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிந்து விட்டது, இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒப்பந்தம் முடிந்து விட்டது, முஸ்லீம் லீக் கட்சிக்கும் முடிந்துவிட்டது. இன்று காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் ஆகியுள்ளது. பாமக மாத்திரம்தான்இனி பாக்கி உள்ளது. அந்த ஒப்பந்தமும் இன்று இரவு அல்லது நாளைக்குள் ஏற்பட்டுவிடும்.

பாமகவுடன் இழுபறி என்பதெல்லாம் சில பத்திரிக்கைகள் கட்டி விடும் கதை.சுமூகமாகவே பேசி வருகிறோம் என்றார் கருணாநிதி.

இன்று பிற்பகலுக்கு மேல் பாமக குழுவினர் கருணாநிதியை சந்திக்கின்றனர்.அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் கருணாநிதி, இன்று மாலைக்குள்பாமக தொகுதிகளை முடிவு செய்து விட தீவிரமாக உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X