காங் கோஷ்டி தலைவர்களின் கட்அவுட்கள் அகற்றம்
சென்னை:
கோஷ்டித் தலைவர்களின் தொண்டர்கள் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமானசத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்களின் கட் அவுட்கள்,பேனர்கள் ஒட்டுமொத்தமாக அகற்றப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான 48 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுவிட்டன. இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் காங்கிரஸ்தலைவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த தொண்டர்கள், தாங்கள் விரும்பிய தொகுதிகள்கிடைக்காமல் போய், அதனால் ஏற்படும் கோபத்தால் கட்சி அலுவலகத்திற்குள்வன்முறையில் ஈடுபடக் கூடும் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுக்கு சில தொகுதிகளைகோரியிருக்கிறார். அதேபோல, வாசன், இளங்கோவன், அன்பரசு, எச்.வசந்தகுமார்உள்ளிட்ட பல்வேறு கோஷ்டித் தலைவர்களும் தங்களுக்கென சில தொகுதிகளைகட்சி மேலிடத்திடம் கறாராக கோரியுள்ளனர்.
ஒருவேளை இந்தத் தொகுதிகள் கட்சிக்குக் கிடைக்காமல் போயிருந்தால் அதனால்கோபமடையும் தொண்டர்கள், பிற தலைவர்களின் கட்- அவுட்களை கொளுத்துவது,பேனர்களை எரிப்பது, அடித்து உடைப்பது என வழக்கமான வன்முறையில் ஈடுபடவாய்ப்புள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாக சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த வாசன்,இளங்கோவன், ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர், தங்கபாலு, ஜெயந்திர நடராஜன்,பிரபு உள்ளிட்ட தலைவர்களின் பேனர்கள், கட் அவுட்கள் அகற்றப்பட்டு விட்டன.
வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படக் கூடும் என்பதாலும் இந்த அகற்றல்பணி வேகமாக நடந்து முடிந்துள்ளது.
எந்த மாதிரியான விளைவுகளையும் சந்திக்கும் வகையில் சத்தியமூர்த்தி பவனில்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கட்சி மேலிடம் பலப்படுத்தி வைத்துள்ளது.
தேர்தல் என்றாலே காங்கிரஸ் கட்சியில் மிரட்டலான கொண்டாட்டம்தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications