பாமக தேர்தல் அறிக்கை: கல்விக்கு முக்கியத்துவம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியினி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
கடந்த சட்டசபைத் தேர்தலை அதிமுகவுடன் சேர்ந்து சந்தித்த பாமக, இந்த முறைதிகவுடன் சேர்ந்து களத்தில் நிற்கிறது. இக்கட்சி 31 தொகுதிகளில் போட்டியிடுகிறது.புதுவை நிலவரம் குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.இந் நிலையில் தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.புதுவை பாமக எம்.பி. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான குழு இந்த அறிக்கையைத்தயாரித்துள்ளது.
தேர்தல் அறிக்கையை இரண்டு புத்தகங்களாக பாமக தயாரித்துள்ளது. முதல்புத்தகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகள்;இன்னொரு புத்தகத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியின் அவலங்கள்,தோல்விகள், வேதனைகளை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 41 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையில் 67முக்கியப்பிரச்சினைகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையின் சில பகுதிகள்:
- தமிழகத்தில் ஒரு எம்.பி. தொகுதிக்கு ஒரு மாவட்டம் வீதம் 39 மாவட்டங்களைஉருவாக்கப்படும்.
- நகர்ப் புறங்களில் மட்டும் அமல்படுத்தப்படும் வீட்டு வசதித் திட்டத்தை கிராமப்புறங்களிலும் அமல்படுத்துவோம்.
- அரசின் நிதியில் 50 சதவீதத்தை ஆரம்பக் கல்வித் திட்டத்திற்கு ஒதுக்குவோம்.
- 3 வயது முதல் 16 வயது வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.
- வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்புக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.
- பாலாறு அணையின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தபாமக உறுதியாக பாடுபடும்.
- சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் ஆட்சியில் பாமக பங்கேற்காது என்பதுஉள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாமக அளித்துள்ளது.
இதுதவிர ஜெயலலிதா அரசின் தோல்விகள், குளறுபடிகளைத் தனியாகபட்டியலிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 234 தொகுதிகளிலும்அமோக வெற்றி பெறும். இது உறுதி.
திமுக கூட்டணியில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் எந்தக் குழப்பமும்இல்லை. சுமூகமாக தொகுதி ஒதுக்கீடு முடியும். அதன் பின்னர் வேட்பாளர் தேர்வுதொடங்கும் என்றார்.
இந் நிலையில் ராமதாஸ் இன்று திமுக தலைவர் கருணாநிதியையும் சந்திக்கவுள்ளார்.அப்போது பாமக, திமுக இடையிலான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்கையெழுத்தாகிவிடும் என்று தெரிகிறது.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications