For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுத் தெருவில் திண்டிவனம், டி.ஆர்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை உடைக்கிறேன்பேர்வழி என்று தனி ஆளாக கட்சியை விட்டு விலகி, அதிமுகவுக்கு ஆதரவுதெரிவித்த திண்டிவனம் ராமமூர்த்திக்கு தனது கூட்டணியில் ஜெயலலிதா சீட்தரவில்லை.

அதே போல வருங்கால முதல்வர் கனவில் இருப்பவரும், அடுக்கு மொழியில்எதையாவது பேசுவதையே லட்சியமாகக் கொண்டவருமான லட்சிய திமுக தலைவர்விஜய.டி.ராஜேந்தருக்கும் சீட் தரப்படவில்லை.

அதிமுக தேர்தல் குழுவிடம் 42 தொகுதிகள் கொண்ட பட்டியலுடன் போய் பெரும்சிரிப்புக்கு ஆளானார் திண்டிவனம். என்னங்க இது என்று அதிமுக தேர்தல் குழுத்தலைவர் ஓ.பி. கேட்க, ஆமாங்க.. காங்கிரஸை உடைச்சிட்டு வந்திருக்கேன் இல்ல..வைகோவை விட ஒரு சீட்டாவது கூடுதலா குடுங்க.. 36 குடுங்க போதும் என்றார்திண்டிவனம்.

அவரை அம்மாவிடம் அனுப்பி வைத்தனர் ஓ.பி. குழுவினர். காங்கிரஸைஉடைச்சிட்டு வாங்கன்னா நீங்க மட்டும் தானே வந்தீங்க.. அதுக்காக உங்களுக்கு ஒருசீட் வேணும்னா தர்றோம் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லிவிட்ட, மண்டைகாயந்து போய் திரும்பி வந்தார் திண்டிவனம்.

அவரை நம்பி காங்கிரஸை விட்டு வெளியே வந்தவர்கள் திண்டிவனத்தைத் தொடர்புகொண்டு எங்களை இப்படி நடுரோட்ல விட்டுட்டீங்களே என்று புலம்பி வருகின்றனர்.திண்டிவனமும் இதையே செல்ப் ஆக புலம்பி வருகிறார்.

அடுத்தவர் டி.ஆர். எனப்படும் விஜய.டி.ராஜேந்தர். நியூமராலஜி நிபுணர் ராஜராஜன்சொன்னார் என்பதற்காக பெயரில் விஜயவை சேர்த்த ராஜேந்தரிடம், உங்களுக்குமுதல்வராகும் ராசி கூட இருக்கு.. உங்க ஜாதக அமைப்பு அப்படி என்று வேறுஊதிவிட்டுள்ளார் ராஜராஜன்.

இதனால் இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்து மீண்டும் எம்எல்ஏ ஆவது.அப்புறமா முதல்வராகிக் கொள்வோமே.. எதுக்கு அவசரம் என்ற நினைப்பில்உள்ளார் டி.ஆர்.

தனது உடையார் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் லால்குடி உள்ளிட்ட 3 தொகுதிகள்லிஸ்டுடன் ஓ.பி குழுவிடம் நம்பிக்கையுடன் போனார். ஓ.பிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. உங்களுக்கு ஒரு சீட் தான் அம்மா சொல்லியிருக்காங்க என்று மந்திரிஓ.பி உள்ளதைச் சொல்ல, டி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.

நான் யாரு.. என்ன என் பேரு.. உங்களுக்கு தெரியுமா எனக்கு இருக்கிற ஜோரு..என்றரீதியில் அடுக்கு வசனத்தை எடுத்துவிட்டதோடு குரலையும் உயர்த்திப் பேச,இந்தத் தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் போனது.

இதையடுத்து டி.ஆருக்கு போனைப் போட்டு போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்தஜெயலலிதா, உங்களுக்கு ஒரு தொகுதி தருவது குறித்தே யோசித்துக் கொண்டு தான்இருக்கிறோம். முடிவு கூட செய்யவில்லை. தருவதாக இருந்தால் நாங்களேகூப்பிடுவோம். சும்மா இந்தப் பக்கம் வர வேண்டாம். போய் பிரச்சார வேலையைபாருங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

தனக்கு ஒரு சீட்டே சந்தேகம் என்பதால் தனியாவே போட்டி போடுவோமா என்றுதனது ஆதரவாளர்களுடன் பேசிப் பார்த்தார் டி.ஆர். யாரும் பாஸிட்டிவாக பதில்தரவில்லை.

இதனால் மீண்டும் அதிமுகவிடமே பெட்டிசனைப் போட்டுவிட்டு ஒரு சீட்டாவதுதருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் திருச்சி வந்த டி.ஆர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகசட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து லட்சிய திமுகபோட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

கூட்டணி குறித்து அம்மாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது(நெசமாவா). முடிவு ஏற்பட்டதும் அறிவிப்பேன் (என்ன முடிவு) என்றார் ராஜேந்தர்.

அதே போல மாஜி பாமகவினரான தீரனின் மக்கள் கட்சி, பு.தா. இளங்கோவனின்பாட்டாளி முன்னேற்றக் கழகம், ஜெகவீரபாண்டியனின் சமூக நீதிக் கட்சி, செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி, பொன். குமார் தலைமையிலான உழைப்பாளர்தொழிலாளர் கட்சி, ஷேக் தாவூத் தலைமையிலான தமிழ் மாநில முஸ்லீம்முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல சிறிய கட்சிகளின் தலைவர்கள் எப்படியும் ஒருசீட்டாவது கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் அதிகவின் இரட்டை இலைச் சின்னத்தில்போட்டியிடும் வகையில் தலா ஒரு சீட் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போதுதான் இந்தக் குட்டித்தலைவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது இதயத்தில் மட்டும் இடமா என்பதுதெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X