For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-7 எம்எல்ஏக்களுக்கு "கல்தா-82 புதுமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த தேர்தலில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்எல்ஏகளுக்குஇந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேட்பாளர்களில் 82 பேர் புதுமுகங்கள் ஆவர்

திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 129 தொகுதிகளில்அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களானதிருவல்லிக்கேணி உசேன், தாம்பரம் வைத்தியலிங்கம், கடலூர் புகழேந்தி, திருச்சி-1பரணிக்குமார், திருவாரூர் அசோகன், பளையம்கோட்டை மைதீன்கான், சிதம்பரம்சரவணன் ஆகியே 7 பேருக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.

இதில் பாளையம்கோட்டை தொகுதி தமிழ் மாநில இந்திய தேசிய முஸ்லீம் லீக்கட்சிக்கும், சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி பெரும்பாலான மூத்த தலைவர்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. பலவிஐபி வேட்பாளர்கள் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் சேலம்-2 தொகுதியில் போட்டியிடுகிறார். வழக்கமாக இவர்வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவார். இம்முறை ஆறுமுகத்தின் மகன்ராஜேந்திரனுக்கு வீரபாண்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் வென்ற நடிகர் நெப்போலியன்,இம்முறை மயிலாப்பூருக்கு மாறியுள்ளார். இங்கு அவர் அதிமுக வேட்பாளரானநாடக-காமெடி நடிகர் எஸ்.வி.சேகரை எதிர்க்கறார் நெப்போலியன்.

கடந்த முறையே சீட் கேட்டு கிடைக்காமல் போனதால் ஏமாற்றத்தில் இருந்தஎழுத்தாளர் பெண் சல்மாவுக்கு இந்த முறை மருங்காபுரி தொகுதிகொடுக்கப்பட்டுள்ளது.

அவருக்காக கருணாநிதியிடம் கனிமொழி பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர்களில் 77 பேர் பட்டதாரிகள். அவர்களில் பெரும்பாலானவர்கள்வழக்கறிஞர்கள். 13 பேர் பெண் வேட்பாளர்கள், நான்கு முஸ்லீம் வேட்பாளர்களும்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

கருணாநிதி மீண்டும் சேப்பாக்கத்திலும், அன்பழகன் மீண்டும் துறைமுகத்திலும்,ஆற்காடு வீராசாமி மீண்டும் அண்ணா நகரிலும், ஸ்டாலின் ஆயிரம் விளக்குதொகுதியிலும் களம் காணுகின்றனர்.

முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மதுரை மத்திய தொகுதியில்நிறுத்தப்பட்டுள்ளார். அதேசமயம், மதுரை மாநகராட்சி மேயரும் தற்போதையதிருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான செ.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

இதில் லாரிகள்- செங்கல் சூளைகள் நடத்தி வரும் மேயர் செ.ராமச்சந்திரன் குஜால்விஷயங்களுக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலரோடு இவர் காரில் ஊர் சுற்றியபோது அந்தக் கார் விபத்துக்குள்ளாகி அந்தகவுன்சிலர் பலியானது நினைவுகூறத்தக்கது. கட்டிய கைலியோடு காரைவிட்டு எஸ்கேப் ஆகி திமுகவின்மானத்தை மொத்தமாக வாங்கினார் ராமு.

அதே நேரத்தில் கருணாநிதியின் முரட்டு பக்தர் என திமுகவினரால் கூறப்படும்தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவனுக்கு சீட்தரப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள்பூங்கோதைக்கும் சீட் கிடைத்துள்ளது.

அதேசமயம், மதுரையில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின்வாரிசுகள் யாருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை.

சுயேச்சையாக நின்று வென்று சமீபத்தில் திமுகவில் சேர்ந்த அப்பாவுக்கு அவர்ஜெயித்த ராதாபுரம் தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் இருந்துவிட்டுதிமுகவில் இணைந்த புரசை ரெங்கநாதனுக்கு தமிழகத்திலேயே பெரிய தொகுதியானவில்லிவாக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த ராஜ கண்ணப்பனுக்குஇளையாங்குடி தொகுதி தரப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பிக்களான ஜெயசீலனுக்கு திருச்செந்தூரும், வி.பி.துரைசாமிக்கு சங்ககரிதொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X