For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டிவனம் கட்சி பெயர் மாற்றம்:ஜெவை எதிர்த்து வேட்பாளர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்டணியில் சேர்ப்பதாக கூறி கடைசியில் டபாய்த்து விட்ட முதல்வர்ஜெயலலிதாவுக்கு எதிராக ஆண்டிப்பட்டியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்திண்டிவனம் ராமமூர்த்தி.

அத்தோடு கட்சியின் பெயரையும் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்றுமாற்றியுள்ளார். 36 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும் ராமமூர்த்திவெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் திண்டிவனம் தொகுதியை வாங்கிக்கொண்டு, தனது ஆதரவாளர்கள் 2 பேருக்கும் சீட் வாங்கித் தந்திருக்கலாம் ராமமூர்த்தி.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக கட்சியில் கலகம் செய்தார்.காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி சலசலப்பைஏற்படுத்திய ராமமூர்த்திக்கு அப்போது அதிமுகவில் பெரும் மரியாதை கிடைத்தது.

அதிமுகவின் ஆசியுடன், காங்கிரஸை கலக்கிய திண்டிவனம் ராமமூர்த்தி தமிழகஇந்திரா காங்கிரஸ் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டு சீட்கள் கேட்கப் போனார்.

ஆனால், அவருக்கு ஒரு சீட் கூட தராமல் கேவலப்படுத்தி அனுப்பிவிட்டது அதிமுக.

இதனால் அதிர்ச்சி அடைந்த திண்டிவனம் தனது கட்சியினருடன் அவசரமாகஆலோசனை நடத்தினார். வீறாப்பாக பேசி காங்கிரஸிலிருந்து வெளியேறிய பின்னர்தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் நன்றாக இருக்காது. சில தொகுதிகளில்போட்டியிடலாம் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று 36 பேர் கொண்ட தனது கட்சியின் முதல் வேட்பாளர்பட்டியலை ராமமூர்த்தி வெளியிட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் சிவா என்கிற சிவக்குமார்போட்டியிடுவார் என்று ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

மற்ற வேட்பாளர்கள் விவரம்:பூங்கா நகர் - சீனிவாச மூர்த்தி

திருவல்லிக்கேணி - ஐஸ்ஹவுஸ் தியாகு

ஜெயங்கொண்டம் - குழந்தை ராமலிங்கம்

புரசைவாக்கம் - புரசை கீதா

வில்லிவாக்கம்- சுதாகரன்

செங்கல்பட்டு- பரமசிவம் முதலியார்

தாம்பரம்-டாக்டர் அக்பர்

காஞ்சிபுரம்- பெர்ரி

வானூர்- திலகவதி

கடலூர்- அசோக்குமார்

குறிஞ்சிப்பாடி- கிருஷ்ணமூர்த்தி

காட்டுமன்னார்கோவில்- மார்க்கெட் மணி

மங்களூர்-செல்வராஜ்

நெல்லிக்குப்பம்- செங்கனி

பெரம்பலூர்- மோகனவேலு

திருவிடைமருதூர்- ஜெயபாலன்

லால்குடி-பாலசுப்பிரமணியன்

திருமயம்- வெங்கடேசன்

மதுரை மத்தி- இந்திரா ராஜ்மோகன் பாரதி

சேடப்பட்டி- நல்லதம்பி

ராமநாதபுரம்- ஜோதி பாலன்

மானாமதுரை- அகரம் ஆறுமுகம்

திருப்பத்தூர்- ஜவஹர்

ஆண்டிப்பட்டி- சிவக்குமார்

சோழவந்தான்- கோபால் நேரு

முதுகுளத்தூர்- சக்திவேல்

கடலாடி- மலைச்சாமி

அருப்புக்கோட்டை- கணேசன்

உத்திரமேரூர்- மனோகர்

ஒசூர்- கிருஷ்ணா ரெட்டி

பர்கூர்-சுப்பிரமணியன்

காரைக்குடி- நாச்சியப்பன்

சிவகங்கை- நாகராஜன்

பண்ருட்டி- தனசேகரன்

திருச்சி 2- சிவக்குமார்

கிருஷ்ணகிரி- சலாவூதீன்

இந்தப் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் திண்டிவனம் பேசுகையில்,

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவிலிருந்து எந்த அழைப்பும்வரவில்லை. இதனால்தான் நாங்கள் கூட்டணியில் இடம் பெறவில்லை. தற்போதுதனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இருப்பினும் சில கட்சிகள் கூட்டணி தொடர்பாக எங்களுடன் பேசிக் கொண்டுள்ளன.முதல் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளோம். மேலும் சில பட்டியல்கள்வெளியாகும். தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிடுகிறோம் என்றார்.

கட்சியின் பெயரை தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்று மாற்றியுள்ளோம். இதைதேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்திண்டிவனம் ராமமூர்த்தி.

இரு நாட்களுக்கு முன்பு வரை கூட அதிமுகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றுதிண்டிவனம் கூறிக் கொண்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X