For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண் மகனாக இருந்தால் வழக்கு போடு-வைகோ

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சரியான ஆண் மகனாக இருந்தால் என் மீது தயாநிதி மாறன் வழக்கு போடட்டும்என்று வைகோ சவால் விட்டுள்ளார்.

சன் டிவிக்கு பிஎஸ்என்எல் விளம்பரங்களைத் தந்த விவகாரம் தொடர்பாக தனக்குமத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு மதுரையில் நடந்தபிரசாரக் கூட்டத்தில் பதிலளித்தார் மதிமுக பொதுச் செயலார் வைகோ.

ருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வீர இளவரசனுக்குஆதரவு திரட்ட பிரசாரம் மேற்கொண்ட வைகோ தேவர் சிலை அருகே நடந்தகூட்டத்தில் பேசுகையில்,

தயாநிதி மாறன் இன்று எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நான் கூறியகருத்துக்களுக்கு நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ஒரு கோடி ரூபாய் நஷ்டகேட்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

உனக்கு ஒன்று தெரியுமா? இந்த உலகமே இடிந்தாலும் வைகோ மன்னிப்பு கேட்கமாட்டான். யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறாய்? 41 ஆண்டு காலம்அரசியலில் இருக்கிறேன், 23 முறை சிறைக்குச் சென்றுள்ளேன்.

சரியான ஆண் மகனாக இருந்தால் என் மீது வழக்குப் போட்டுக் கொள். நான் வக்கீல்வைத்து வாதாட மாட்டேன். நானே ஆஜாரகி நேரில் வாதாடுவேன்.

உன்னிடமும் குறுக்கு விசாரணை நிடத்துவேன். என் மீது வழக்குப் போடும் முன்புஉன் தாத்தாவிடம் (கருணாநிதி) கலந்து பேசிக் கொள்.

இப்போது 10 சதவீதம்தான் பேசியுள்ளேன். இன்னும் 90 சதவீத கேள்விகள்இருக்கிறது. தேர்தல் முடியும் வரை பேசுவேன். எனக்குப் பதில் சொல்லவே நீங்கள்தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.

நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து இதுவரை முறையான பதில் இல்லை.எனது எம்.பிக்களை கணக்கில் காட்டி, அடமானம் வைத்து மந்திரி பதவிவாங்கியுள்ளீர்களே என்ற கேட்டேன். அதை இதுவரை மறுக்கவில்லை.

நேரடியான பதில் இல்லை. சன் டிவி குறித்து குற்றச்சாட்டுக்களை வைத்தேன்.அதற்கும் நேரடியாக பதில் சொல்வதை விடுத்து, நேற்றும் இன்றும் என் மீதுஅவர்களது டிவியிலும், பத்திரிக்கையிலும் என் மீது பல குற்றச்சாட்டுக்களைக்கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் டிவி நடத்துகிறவர்கள், பத்திரிக்கை நடத்தவில்லையா? என்றும் மற்றபத்திரிக்கைகள் நடத்துபவர்கள் டிவி நடத்தவில்லையா என்று கேட்கிறார்கள். நான்கேட்கிறேன், அவர்கள் எல்லாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லையே!.

இவர்கள் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டையே ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இதேபோல பத்திரிக்கை, எப்.எம் ரேடியோ ஆகியவையும்அவர்களிடம் உள்ளது.கேபிள் டிவியை அனைவரும் குறைந்த விலையில் பார்க்க வேண்டும் என்றஎண்ணத்தில் கேபிள் டிவி மசோதாவைக் கொண்டு வந்தார் புரட்சித் தலைவி முதல்வர்ஜெயலலிதா.

இந்த மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுனருக்கு அனுப்பி வைத்தார். இதைக்கேள்விப்பட்டதும், திமுகவில் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தயாநிதி மாறனைஅழைத்துக் கொண்டு படை பரிவாரங்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்தார்கலைஞர்.

நான் கேட்கிறேன், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காகவா ஆளுநரைச்சந்தித்தீர்கள்.? காவிரிப் பிரச்சினைக்காகவா ஆளுநரைச் சந்தித்தீர்கள்? இல்லை,குடும்பச் சொத்தை பாதுகாப்பதற்காக, ஓடோடிச் சென்று ஆளுநரைச் சந்தித்தீர்கள்என்றார் வைகோ.

முன்னதாக நெல்லையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய வைகோ, தயாநதி மாறன்மீது இன்னொரு புகாரை சுமத்தினார்.

அவர் பேசுகையில், திமுகவில் துரும்பைக் கூட தூக்கிப் போடாத தயாநிதி மாறனிடம்கேட்கிறேன். 10 கோடி ரூபாய்க்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் உங்கள் குடும்படிவிக்கு விளம்பரம் கொடுத்துள்ளது.

தயாநிதி மாறன் மந்திரி ஆவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விளம்பரம் எவ்வளவுஎன்பதற்கு பதில் சொல்லுங்கள்.

மத்தியில் ஒரு இலாகா பொறுப்பில் இருப்பவர், அந்த இலாகா சம்பந்தப்பட்டதொழில் செய்யக் கூடாது என்பதுதான் நடைமுறை.

ஆனால் தமிழகத்தில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்துஅதை இயங்க விடாமல் செய்ததால் அந்த நிறுவனம் ரூ. 4,800 கோடிக்குமலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உள்ளது.

இதற்கு எப்படி மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்தது? இந்தசெல்போன் நிறுவன விற்பனையில் நடந்த பின்னணி என்ன? இதுகுறித்து சிபிஐவிசாரிக்க வேண்டும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X