17ம் தேதி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி ஏப்ரல் 17ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில்போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை வருகிற 9ம் தேதி தொடங்குகிறார். தான்போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் முதல் மூன்று நாட்களுக்கு அவர் தீவிரப்பிரசாரம் மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வருகிற 24ம் தேதி வரைபிரசாரம் செய்கிறார்.
தனது முதல் கட்ட பிரசாரத்தில், சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் 6 நாட்களுக்குகருணாநிதி பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். வரும் 17ம் தேதி காலை 10.30மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
கருணாநிதியின் சுற்றுப் பயணத்தையொட்டி கட்சியினருக்கு ஏராளமானகட்டுப்பாடுகளை திமுக விதித்துள்ளது. அதன்படி, கருணாநிதி வரும்சாலையோரங்களில் பேசும் பிரசாரங்களைத் தவிர வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடுசெய்யக் கூடாது.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்கவேண்டும். வான வேடிக்கைகள், துணடு, பொன்னாடை, மாலைகள் அணிவிப்பதைகண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
திமுக தொண்டர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், கார் போன்றவற்றில் தொற்றிக்கொண்டு ஊர்வலம் போல செல்லாமல் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை விரைவாக நடத்திமுடிக்க ஒத்துழைத்திட வேண்டும் என்று தலைமைக் கழக செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
| INDIA NEWS |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications