உளவுத்துறை ரிப்போர்ட்: ஜெ-வைகோ-திருமா மதுரை கூட்டம் ரத்து?
சென்னை:
மதுரையில் ஒரே மேடையில் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர்பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
ஜெயலலிதா சென்னையிலிருந்தும், வைகோ நெல்லையிலிருந்தும், திருமாவளவன்வட மாவடங்களிலிருந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும்சங்கமிக்கும் விதமாக ஏப்ரல் 8ல் மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில்பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந் நிலையில் உளவுத் துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டால் அதிமுக தலைமைஅந்தக் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதியும் தரக் கூடாது.கொடுத்தால் முக்குலத்தோரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று உளவுத்துறைஅறிக்கை தந்ததால், அவருக்கு தென் மாவட்டத்தில் ஒரு சீட்டையும் ஜெயலலிதாஒதுக்கவில்லை.
அதே போல இப்போது, தென் மாவட்டங்களில் திருமாவளவனுடன் ஒரே மேடையில்பிரச்சாரம் செய்தால் முக்குலத்தோரின் ஒட்டுகளை இழக்க நேரிடும் என அதிமுகதலைமைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து மதுரை பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இது குறித்து மதுரை அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, கூட்டணிதலைவர்கள் ஓரே மேடையில் தோன்றினால் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்என நினைத்தோம். ஆனால் கூட்டத்தை ரத்து செய்யும்படி தற்போது தகவல்வந்துள்ளது.
மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய நேரம் இருக்காது என ஜெயலலிதா கூறவிட்டார்.இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என கூறினார்.
திருமாவளவனை மட்டும் விட்டுவிட்டு வைகோவுடன் மேடையேறுவது சரியாகஇருக்காது என்பதால் ஒட்டு மொத்த பொதுக் கூட்டத்தையும் ஜெயலலிதா ரத்துசெய்துள்ளார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications