For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுக அலுவலகம் சூறை: பாமகவினர் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

கரூர் மாவட்ட மதிமுக அலுவலகத்தை பாமகவினர் சூறையாடினர்.

வைகோவுக்கு எதிராக பாமக செயலாளர் பாஸ்கரன் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்கக் கோரிபாமக அலுவலகம் எதிரே மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையேமோதல் உருவானது.

அடிதடி ஏற்படும் சூழல் உருவானதையடுத்து போலீசார் தலையிட்டு மதிமுகவினரை கலைந்து போகச் செய்தனர்.

இதையடுத்து பாஸ்கரன் தலைமையில் பாமகவினர் ஆயுதங்களுடன் மதிமுக அலுவலகம் நோக்கி வந்தனர். கத்தி,அரிவாளுடன் வந்த பாமகவினரைப் பார்த்த மதிமுகவினர் அலுவலகத்தில் இருந்து தப்பியோடினர்.

இதையடுத்து மதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த பாமகவினர் அங்கிருந்த மேஜைகள், படங்கள், நாற்காலிகளைஅடித்து உடைத்து துவம்சம் செய்தனர். பல்புகள், விளம்பரப் பலகைகள் என கண்ணில் பட்ட அனைத்தும்உடைத்தெறியப்பட்டன. மதிமுக போர்டும் உடைக்கப்பட்டது.

மதிமுக அலுவலகத்தை ஒட்டுமொத்தமாக சூறையாடிவிட்டே பாமகவினர் அங்கிருந்து மிரட்டல் சவுண்டுவிட்டபடி கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து மதிமுகவினரும் அதிமுகவினரும் கூடி சாலை மறியலில் இறங்கினர். இதனால் அப் பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சித் தலைமைக்குத் தகவல் போனதையடுத்து இரண்டாம் மட்ட மதிமுக தலைவர்கள் கரூர் மாவட்டகட்சியினருடன் பேசி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர்.

இதையடுத்து பாஸ்கரன் மீது போலீசார் பல்வேறு செக்ஷன்களில் சரமாரியாக வழக்குகளைப் பதிவு செய்தனர்.

அதே போல பாமகவினரும் மதிமுகவினர் மீது புகார் கொடுத்தனர். அதை வாங்க முதலில் போலீசார்யோசித்தனர். நாங்களும் போராட்டத்தில் இறங்குவோம் என பாமகவினர் மிரட்டியதைத் தொடர்ந்துமதிமுகவினர் மீதும் போலீசார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X