இலங்கையில் 50,000 தமிழர்கள் இடம் பெயர்வு
கொழும்பு:
இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் சூழல் நிலவுவதாலும், இலங்கை விமானப் படையின் தொடர் குண்டுவீச்சுகளாலும் சுமார் 50,000 தமிழர்கள் நாட்டின் வட-கிழக்குப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்துள்ளதாகஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ள இவர்கள் எங்கு போவது என்று தெரியாமல் அல்லாடிவருகின்றனர். பெரும்பாலானவர்கள் முத்தூர், ஈச்சிலம்பட்டு ஆகிய பகுதிகளில் குவிந்துள்ளனர்.இதற்கிடையே ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் 97 தமிழர்களை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல தமிழர்களின் வீடுகளிலும் விடுதிகளிலும் சோதனைகள் நடந்தன.
இது தவிர செருவில்லா பகுதியில் 3 தமிழர்களை சிங்கள ஊர்க் காவல் படையினர் வெட்டிக் கொன்றுள்ளனர்.மேலும் 2 பேரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் குறித்து உலக நாடுகள் பாராமுகமாக இருப்பதாகவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கையின் செயலை உலக நாடுகள் தடுக்க வேண்டும்என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே திரிகோணமலையில் நடந்துள்ள தாக்குதல்களை நேரில் பார்வையிட்ட புலிகளின் திரிகோணமலைபோலீஸ் பிரிவின் தலைவர் எழிலன் கூறுகையில்,
நாங்கள் பதில் தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம். தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தால் நாங்கள் நடத்தப்போகும் பதிலடித் தாக்குதல் மிக மிக மோசமானதாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications