For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்-வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

தமிழகத்தை தமிழன் ஆண்டால் தான் மாநிலம் உருப்படும் என திக தலைவர் கி.வீரமணி கூறினார்.

விழுப்புரத்தில் திமுக பிரச்சாரக் கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். அப்போது தான் தமிழகம் உருப்படும். கடந்த மக்களவைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கடும் பாடம் புகட்டினீர்கள். போட்டியிட்ட அத்தனை இடத்திலும் ஒரு பெரிய கட்சிதோற்ற வரலாறே இல்லை. அந்த வரலாறு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

சுனாமி வந்தபோதும், வெள்ளம் வந்தபோதும் மக்களுக்கு இலவச அரிசி தரும் சிந்தனை ஜெயலலிதாவுக்குவரவில்லை. இப்போது தேர்தல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் போகிறோம் என்றவுடன் ஓசியில் அரிசுபோடுகிறேன் என்கிறார். இனிமேலும் ஜெயலலிதாவால் மக்களை ஏமாற்ற முடியாது என்றார் வீரமணி.ஜெ மீது வீரப்பன் தாக்கு:

வில்லிவாக்கத்தில் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிரச்சாரம் செய்கையில்,

2001 முதல் 2006 வரை தமிழகத்துக்கு கெட்ட காலம் பிடித்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சியின் ஒரே சாதனை,அவரும் அவரது சகோதரியும் சேர்ந்து நடத்தும் சாராய பேக்டரி தான். அதிலும் கூட வருமான வரி செலுத்தாமல்மோசடி செய்துள்ளார்கள்.

கணக்கு காட்டும் பழக்கம் ஜெயலலிதாவின் பரம்பரைக்கே கிடையாது. அதனால் தான் தமிழக சுனாமி, வெள்ளநிவாரணத்துக்கு மத்திய அரசு கொடுத்த காசை வாங்கிப் போட்டுக் கொண்டு, காசே தரவில்லை என்று பொய்சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிம்ரனின் தமிழ் பிரசாரம்- தா.பா. வேதனை

தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு வழிகாட்ட தமிழ்ப் பேசவோ, தமிழ்க் கலாச்சாரம் பற்றியுயோ துளியும்தெரியாத சிம்ரன் வருகிறார். இதைப் பார்க்க வேண்டிய, அவரைப் பற்றிப் பேச வேண்டிய துர்பாக்கிய நிலைக்குநாம் ஆளாகிவிட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

விளாத்திகுளத்தில் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது:

சுதந்திரம் பெற்ற பின் முதல் சட்டமன்றத் தேர்தல் 1952ல் நடந்தது. பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜீவா,சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் சந்தித்த தேர்தல் அது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்பிரச்சாரத்தில் நாகரீகமும் பண்பாடும் இருந்தது.

இப்போது நடப்பது 13வது சட்டமன்றத் தேர்தல். இப்போது யார் யாரெல்லாம் பிரச்சாரத்துக்குஅனுப்பப்பட்டுள்ளார்கள் என்று நினைத்தால் உள்ளம் வலிக்கிறது.

தமிழகத்துக்கு, தமிழக மக்களுக்கு வழிகாட்ட தமிழ்ப் பேசவோ, தமிழ்க் கலாச்சாரம் பற்றியுயோ துளியும்தெரியாத சிம்ரன் வருகிறார். கோவை சரளா வருகிறார். செந்தில் வருகிறார். இதையெல்லாம் பார்க்க வேண்டிய,இவர்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோம்.

இந்த அழிவு வரலாற்றை என்ன செய்வது?. பல கோடி ஏழைகள வாழும் தமிழகத்தில் இருக்க வீடில்லை, நிலம்இல்லை. செத்தால் புதைக்க சுடுகாடும் இல்லை. இதனால் ஏழைக்கு 2 ஏக்கர் நிலம் என்று அறிவித்துள்ளது திமுக.

அதில் ஒரு பகுதியில் குடிசை போட்டுக் கொண்டு மிச்ச இடத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்துங்கள்.

நான் ரயிலில் வரும்போது பலரும் வந்து எப்போது கலர் டிவி தருவீர்கள் என்று கேட்டனர். இதற்கு என்னஅர்த்தம்? மக்கள் அதை வாங்கத் தயாராகிவிட்டார்கள், திமுகவுக்கு ஓட்டுப் போட முடிவு செய்துவிட்டார்கள்என்று தானே அர்த்தம் என்றார் பாண்டியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X