For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாபட்டியில் நடிகர்-நடிகையர் முற்றுகை

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரை ஆதரித்துஅதிமுகவைச் சேர்ந்த நடிகர், நடிகையர் பட்டாளம் அந்தத் தொகுதியைமுற்றுகையிடத் தொடங்கியுள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஜெயலலிதா 4 நாட்கள்அத்தொகுதியில் பிரசாரம் செய்துள்ளார். தற்போது வட மாவட்டங்களில்சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் ஆண்டிப்பட்டியில் அம்மாவுக்காக ஓட்டுசேகரித்து வருகிறார்கள். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தினகரன் எம்.பி. ஆகியோர்ஆண்டிப்பட்டியில் முகாமிட்டு தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் நடிகர், நடிகையர் பட்டாளுமும் ஆண்டிப்பட்டியில் குவியத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகை விந்தியா, மாமா எஸ்.எஸ்.சந்திரன்,மாப்பிள்ளை ராதாரவி ஆகியோர் ஒரு சுற்றுப் பிரசாரத்தை இங்கு முடித்துள்ளனர்.

4ம் தேதி நடிகை சிம்ரன் ஆண்டிப்பட்டிக்கு வருகிறார். திம்மரசநாயக்கனூர் (இந்த ஊர்பேராவது சிம்ரன் வாயில் நுழையுமா?) கிராமத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கும்சிம்ரன், தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கு சூறாவளி பயணம் செய்து ஓட்கேட்கப் போகிறார்.

இதேபோல நடிகர்கள் சரத்குமார், விஜயக்குமார், பழைய கவர்ச்சி நடிகை சங்கீதாஆகியோரும் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளனர்.

கோவை சரளாவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

திமுகவும் சும்மாயில்லை. அதுவும் சினிமா கலைஞர்களை ஆண்டிப்பட்டியில்களமிறக்கவுள்ள. திமுக வேட்பாளர் சீமானை ஆதரித்து இயக்குனர் பாக்யராஜ்செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்கிறார்.

இயக்குனர் விஜய டி.ராஜேந்தர், நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து ஆகியோரும்ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள்.

ராஜேந்தர் மீது முரளி தாக்கு:

இந் நிலையில் நடிகர் முரளி கிணத்துக்கடவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடிகர்கள் விலை போய் விட்டார்கள் என விஜய டி.ராஜேந்தர் கூறுகிறார். அப்படிக்கூறுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை. அவரைப் பார்த்தால் கட்சித் தலைவர்போலவே தெரியவில்லை. ஏதோ கணக்குப் பிள்ளை கணக்காகத் தெரிகிறது.

10 சீட் கொடுத்தால் அம்மா அம்மா என்பார். இல்லை என்றதால் அப்பா அப்பா என்றுகூறிக் கொண்டு அங்கே போய் விட்டார். அவருக்கென்று கொள்கை கிடையாது, பதவிஆசை மட்டும்தான் உள்ளது.

அதற்கு விஜயகாந்த்தை ஒரு வகையில் பாராட்டலாம். யாரும் எனக்கு வேண்டும்,தனித்து நிற்கிறேன் என்று கூறி தைரியமாக நிற்கிறார்.

அதேபோல பாக்யராஜ் செய்த துரோகத்தையும் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள். அவரை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தவர் எம்.ஜி.ஆர்.அப்படிப்பட்ட பாக்யராஜ் நடுநிலையோடு இருந்திருக்கலாம்.

அதை விடுத்து திமுகவில் சேர்ந்து கொண்டார். இதற்கு அவர் தற்கொலைசெய்திருக்கலாம் என்றார் முரளி.

சரி இப்போது எத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நிருபர்கள்கேட்டதற்கு, தலை, அரக்கன் என இரு படங்கள் கையில் உள்ளன. தேர்தல் முடிந்ததும்படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றார் முரளி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X