தமிழகத்தில் திமுக அலை வீசுகிறது: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகாது. எங்கள் கூட்டணிக்கு ஆதரவான வலுவான அலை வீசஆரம்பித்துவிட்டதால் திமுக தனித்தே ஆட்சியமைக்கும் என கருணாநிதி கூறியுள்ளார்.
எனது 60 வருடத்துக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் எனக்கு இப்படிப்பட்ட கூட்டம்கூடி நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கடந்த வாரம் திருச்சியில் பேசிய கருணாநிதி, கூட்டணி ஆட்சி அவசியமானால் அதற்கும் திமுக தயங்காது என்றுகூறியிருந்தார். அதே போல திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் திமுக தனித்தபெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். தேவைப்பட்டால் கூட்டணிஆட்சிக்கும் தயார்தான் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று சென்னையில் பிரச்சாரத்துக்கு இடையே நிருபரிடம் பேசிய கருணாநிதி,
தமிழகத்தில் 3 சுற்று பிரச்சாரத்தை முடித்துவிட்டேன். போகும் இடமெல்லாம் கூடிய கூட்டமும், எழுச்சியும்எங்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. மேலும் எங்களுக்குக் கிடைக்கும் தகவலின்படி தமிழகத்தில்தொங்கு சட்டசபை ஏற்படாது. இதனால் கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பிருக்காது.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அலை வீச ஆரம்பித்துவிட்டது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது.இதனால் எங்கள் வெற்றி உறுதி.
சர்வாதிகார ஜெயலலிதாவுக்க குட் பை சொல்ல மக்கள் தயாராகிவிட்டார்கள். ஜனநாயகத்தின் கதவுகள் திறக்கப்போகின்றன. இலவச அரிசி, இலவச தாலியை எல்லாம் ஜெயலலிதா எதிர்க் கட்சித் தலைவராக வந்துமக்களுக்குக் கொடுக்கலாம்.
எனது 60 வருடத்துக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் எனக்கு இப்படிப்பட்ட கூட்டம்கூடி நான் பார்த்ததே இல்லை. எல்லா தரப்பு மக்களுமே மாற்றத்தை விரும்புவதைத் தான் இது காட்டுகிறது.திமுகவுக்கு மட்டுமல்ல மொத்தத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கே ஆதரவான அலை வீசுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications