ஸ்டாலினுக்கு உதவ 2 சூப்பர் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருந்து அமைச்சகத்தைதிறம்பட நடத்த மிகத் திறமையான அதிகாரிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன், அசோக்வரதன் ஷெட்டி ஆகியோரை முதல்வர் கருணாநிதி தேர்வு செய்து நியமித்துள்ளார்.

கும்பகோணம் தீ விபத்து, நாகை மாவட்ட சுனாமி பாதிப்புகளை மிகச் சிறப்பாகக்கையாண்டு சர்வதேச அளவில் பெயர் பெற்ற இளைய அதிகாரி ராதாகிருஷ்ணன்என்பது நினைவுகூறத்தக்கது.

Radhakrishnan
முதல் முறையாக அமைச்சராகியுள்ள ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் துறைவழங்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான, மக்களுடன், மக்கள் பிரச்சினைகளுடன்நேரடித் தொடர்பு கொண்ட துறை இது.

தமிழக அரசுத் துறைகளிலேயே அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கப்படும் துறையும்இதுதான் (கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி வரை ஒதுக்கப்படுகிறது).

அப்படிப்பட்ட முக்கியமான துறையைக் கொடுத்துள்ள கருணாநிதி, ஸ்டாலின்சிறப்பாக செயல்படுவதற்கு வசதியாக நல்ல திறமையான, சர்ச்சைகளில் சிக்காதஅதிகாரிகளைத் தேர்வு செய்து நியமித்து வருகிறார்.

முதல் கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராகநியமிக்கப்பட்டார். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகச் சிறந்த அதிகாரி என்றுபெயர் பெற்றவர் ராதாகிருஷ்ணன்.

பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவராக இருந்து அந்தந்த மாவட்ட மக்களின்அன்பையும், பாராட்டையும் பெற்றவர். தஞ்சை ஆட்சித் தலைவராக இருந்தபோதுநடந்த கும்பகோணம் பள்ளிக் கூட தீ விபத்து கோர சம்பவத்தை திறமையாக அணுகி,பாதிக்கப்பட்ட மக்களின் பாராட்டைப் பெற்றார்.

Ashokvardhan
அதேபோல நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, சுனாமிபாதிப்பை திறம்பட சமாளித்தார். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இவர்காட்டிய வேகமும், விவேகமும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை வெகுவாககவர்ந்தது.

அத்தோடு இவரது அனுபவத்தையும், அணுகுமுறையையும் அறிந்து கொண்டு பயன்பெற இலங்கை அரசும் அங்கு வரவழைத்து ராதாகிருஷ்ணனிடம் பாடம் கற்றுக்கொண்டது.

அப்படிப்பட்ட சிறந்த அதிகாரியான ராதாகிருஷ்ணன் தற்போது ஊரக வளர்ச்சித் துறைஇயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் அத்துறை சிறப்படையும், இதன் மூலம்ஸ்டாலினுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல இன்னொரு அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி. ராதாகிருஷ்ணனைப்போலவே திறமையான, சர்ச்சைகளில் சிக்காத அதிகாரி ஷெட்டி. இவரும் பல்வேறுமாவட்டங்களில் கலெக்டராக இருந்தவர். அவரை ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகநியமித்துள்ளார் கருணாநிதி. இவர் தொடர்பான செய்திகள் ஊனமுற்றோர் நலத்துறையின் ஆணையராக இருந்துவந்தார்.

இதுவரை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்து வந்த சாந்த ஷீலா நாயர்அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

இப்படி இரு திறமையான அதிகாரிகளை ஸ்டாலின் துறைக்கு கருணாநிதிகொடுத்துள்ளதால் அத்துறைக்கு புதிய பலம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மாற்றப்பட்ட, சாந்த ஷீலா நாயர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்)தலைவராக நயமிக்கப்பட்டுள்ளார். இவரும் சுனாமி பாதிப்பின்போது ஆரம்ப கட்டப்பணிகளை முடுக்கி விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல அதிமுக ஆட்சியில் விவசாயத் துறை கூடுதல் இயக்குனராக இருந்துசிறப்பாக செயல்பட்டு வந்த சந்தானத்தையே அத்துறையின் இயக்குனராகநியமித்துள்ளார் கருணாநிதி.

இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த வாசுதேவன் கூட்டுறவு, உணவு மற்றும்நுகர்வோர் பாதுகாப்பு துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+