போப்புக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்
சென்னை:
இந்தியாவின் மத சுதந்திரத்துக்கு சில மாநில அரசுகள் தடையாக இருப்பதாகக்கூறியுள்ள போப் ஆண்டவருக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் இந்துமுன்னணி, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை சில மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது குறித்தும், மத சுதந்திரம் குறித்தும் போப் ஆண்டவர் சமீபத்தில் கருத்துதெரிவித்திருந்தார்.அவரது கருத்துக்கு பாஜகவிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மத்திய அரசும்ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள வாடிகன் தூதரைமத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பைதெரிவித்துள்ளது.
இந் நிலையில் சென்னையில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன்,பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராம. கோபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் உள்ள அத்தனை மதங்களும் சம உரிமையை அனுபவித்து வருகின்றன.உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கே மத சுதந்திரம் மிகச் சிறப்பாகஉள்ளது. உண்மையில் பெரும்பான்மை மதமான இந்து மதம்தான் நெருக்கடிகளைசந்தித்து வருகிறது.
இந் நிலையில் இந்தியாவின் உள் விவகாரங்களில் போப் எப்படித் தலையிடலாம்?அவருக்கு இந்தியாவின் மத சுதந்திரம் குறித்துக் கருத்து கூற என்ன உரிமை உள்ளதுஎன்று ஆவேசமாக கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications