For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர்களின் சம்பளத்தை குறைக்கனும்- ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திரைப்படங்களில் ஆபாசமான பாடல்களைத் தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்டபாடல்கள் நமக்கு தேவையில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலக்கணம் என்ற படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது. முதல் கேசட் மற்றும் சி.டியை ராமதாஸ் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலிதாணு பெற்றுக் கொண்டார்.

விழாவில் ராமதாஸ் பேசுகையில், பிற மொழி வார்த்தைகள் கலப்பு இல்லாமல்இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் பவதாரணியைமுதலில் பாராட்டுகிறேன்.

அவருக்கு ரூ. 1 லட்சம் பரிசாகவும் வழங்குகிறேன். இதேபோல பிற மொழி கலப்புஇல்லாமல் பாடல்கள் அமையும் படங்களுக்கு பொங்கு தமிழ் அறக்கட்டளை சார்பில்ரூ. 1 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.

திரைப்படங்களில் நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 7 வயதுமுதல் 70 வயது வரை உள்ளவர்கள் முனுமுனுக்க வேண்டும் என்பதற்காககல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா என்று பாடல் எழுதக் கூடாது.

அந்தப் பாடலின் மூன்றாவது வரியை சொல்வதற்கு என்னவோ போல உள்ளது.அதுபோன்ற பாடல்கள் நமக்குத் தேவையில்லை.

படம் திரைக்கு வந்த பத்து நாட்களில் வசூலை எடுத்து விட வேண்டும் என்றுநினைக்கிறார்கள். 13 வயது முதல் 19 வயது வரையிலான பிள்ளைகளைஎப்படியாவது படம் பார்க்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் படம்பார்ப்பவர்கள் தங்களது மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்திய அளவில், உலக அளவில் வருடத்துக்கு ஒரு தமிழ்ப் படமாவது விருது வாங்கவேண்டும்.

மசாலா படங்கள் தயாராகாமல் இருக்க மக்கள் மனதில முதலில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்களை பாதிக்க வேண்டும் என்பதற்காக மசாலா படங்கள்எடுத்தவர்கள் எல்லாம் இப்போது பணம்முவேண்டும், தமிழ் பண்பாடும் வேண்டும்என்ற நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகர்கள் எல்லாம் இன்று கோடி கோடியாக சம்பளம் பெறுகிறார்கள். இந்த நிலைமாற வேண்டும். அவர்கள் முதலில் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான்குறைந்த முதலீட்டில் தரமான பல தமிழ்ப் படங்களை உருவாக்க முடியும்.

நிறைய குறும்படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஓடினால்போதும், இரண்டரை மணி நேரம் படத்தை வளர்ப்பதால்தான் மசாலா, கவர்ச்சிஆகியவை திணிக்கப்படுகிறது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X