For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிரம்: கஞ்சா பெண் மலர் சரண்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரவுடிகளை பிடிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவியான பால்காரரை போலீஸார்பிடித்துக் கொண்டு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளைப் பிடிக்கும் வேலையில்போலீஸார் இறங்கியுள்ளனர். இந்த வேட்டையில் 1,000க்கும் மேற்பட்ட ரவுடிகள்போலீஸ் பிடியில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் 400க்கும் மேற்பட்ட ரவுடிகளைவளைத்துப் பிடித்துள்ளனர் போலீசார். இவர்களில் ஓலை ரவி என்ற பிரபல ரவுடியும்அடக்கம். பிரபல ரவுடியான வெள்ளை ரவியின் கூட்டாளிதான் இந்த ஓலை ரவி.

சென்னை நகர ரவுடிகளின் தாயகமான வியாசர்பாடி, மகாகவி பாரதி நகரைச்சேர்ந்தவன் ஓலை ரவி. இவன் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சிவழக்குகள் உள்ளன. ரவி தவிர அவனது கூட்டாளி வெற்றிவேல் உள்ளிட்ட 5 முக்கியரவுடிகளையும் போலீஸார் பிடித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு நடந்த வேட்டையில் மட்டும்100 பேர் சிக்கினர். இவர்களில் 39பேர் வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள். 40 பேர் கஞ்சா, கள்ளச் சாராயம்விற்பவர்கள்.

பிடிபட்டுள்ள ரவுடிகள் குற்றவியல் சட்டம் 110வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். ரவுடிகள் வேட்டையில் போலீஸார்தீவிரமாக இறங்கியிருப்பதால் பல குட்டி ரவுடிகள் இனிமேல் நாங்கள் சமூக விரோதசெயல்களில் ஈடுபட மாட்டோம் என்று மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படி சரண்டர் ஆகும் ரவுடிகளை ஆர்.டி.ஓ. முன் ஆஜர்படுத்தி அவர்களிடம் எழுதிவாங்கப்படுகிறது. எழுதி வாங்கப்பட்ட ரவுடிகள் மீண்டும் சமூக விரோத செயலில்ஈடுபட்டால் அவர்களை விசாரணையின்றி 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில்அடைக்க வழி உண்டு. எழுதி கொடுத்துச் செல்லும் ரவுடிகளை போலீஸார் தீவிரமாககண்காணித்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் ரவி கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியரவுடியான நாகூர் மீரானை போலீஸார் அதிகாலையில் சுட்டுக் கொன்றனர். இதனால்சென்னையில் உள்ள ரவுடிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்ஊரை விட்டு ஓட ஆரம்பித்துள்ளனர்.

இந்த ரவுடிகள் வேட்டையை இணை ஆணையர் ஜாங்கிட் தான் தலைமை தாங்கிநடத்தி வருகிறார்.

மாட்டிய அப்பாவி:

இந் நிலையில் கடந்த 5ம் தேதி போலீஸார் பல ரவுடிகளை வளைத்து வளைத்துப்பிடித்தனர். அவர்களில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். இதில்சோகம் என்னவென்றால் ரவுடி எனறு போலீஸாரால் பிடிக்கப்பட்ட லட்சுமணன்அப்பாவியான பால்காரர் ஆவார்.

தங்களது மகன் லட்சுமணனைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர்எழுமலையும், லட்சுமியும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணிடம் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆணையர்,லட்சுணன் ரவுடிகள் வேட்டையில் சிக்கியிருப்பதை அறிந்தார்.

லட்சுமணன் தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 5ம் தேதி இரவு தனது நண்பர் ஒருவரை சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு வீடு திரும்பிய லட்சுமணன் வீட்டுக்கு வெளியேபடுத்துத் தூங்கினார். அப்போது அங்கு வந்த கோடம்பாக்கம் போலீஸார்லட்சுமணனை ரவுடி என்று கூறி பிடித்துச் சென்று சிறையில் தள்ளி விட்டனர்.

மகனைக் காணாமல் தவித்த பெற்றோர் மாநகர காவல்துறை ஆணையரை அணுகவேஉண்மை தெரிய வந்தது. லட்சுமணன் குறித்த உண்மை தெரிய வந்ததும், எழுமலை,லட்சுமியை ஆறுதல்படுத்திய ஆணையர், லட்சுமணனை விடுதலை செய்ய உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.

கண்ணீரும், கம்பலையுமாக வெளியே வந்த எழுமலையும், லட்சுமியும், வீட்டுக்குவெளியே படுத்துத் தூங்கினால் அது குற்றமா, அப்படிச் செய்தால் ரவுடித்தனமா என்றுபுலம்பியவாறு சென்றனர்.

கஞ்சா பெண் மலர் கைது:

இதற்கிடையே ரவுடிகளை போலீசார் வேட்டையாடி வருவதால் 20 ஆண்டுகளாக சென்னையில் கஞ்சா விற்று வந்த பெண் போலீஸ் கமிஷனரிடம் மன்னிப்புகேட்டு சரண் அடைந்துள்ளார்.

Malar
இவரது பெயர் கஞ்சா மலர் (40). திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரில் வசித்து வரும் மலர் 20 வயதில் கஞ்சா விற்க தொடங்கினார். இவருக்கு சுரேஷ்(24) என்ற மகனும், கோமதி (19) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை 4 முறைக்கு மேல்குண்டர் தடுபபுச் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்.

இப்போதும் ஜாமீனில் தான் வெளியே இருக்கிறார். பிரபல ரவுடி கேட் ராஜேந்திரனுக்கு நெருக்கமான மலர் அவனது உதவியோடு கஞ்சா விற்றுவந்தார். மலரின் வீட்டிலேயே கேட் ராஜேந்திரன் வசித்து வந்தான்.

இந் நிலையில் மலர் போலீஸ் கமிஷனர் முன் சரண் அடைந்துள்ளார். தனது மகள் மேல் படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் நான் போதை பொருள் விற்பதுஅவளுக்கு பிடிக்கவில்லை என்றும் எனது மகளுக்காக நான் வியாபாரத்தை நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ள மலர் தன்னை மன்னித்து திருந்தி வாழஅனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X