• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழர் பாதுகாப்பு: இலங்கையிடம் இந்தியாகண்டிப்பு- கொழும்பில் இன்று குண்டுவெடிப்பு

By Staff
|

டெல்லி:

இலங்கையில் நிலவும் போர்ச் சூழலில் தமிழர்களின் பாதுகாப்பு மிகவும்முக்கியமானது. அதில் இலங்கை அரசு கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கைவெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவிடம் இந்தியா திட்டவட்டமாகத்தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லி வந்துள்ளார். நேற்றுபிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம்சரண் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து சமரவீரா,பிரதமரிடம் விளக்கினார்.

மேலும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளை புலிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் சமாதானப்பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாக சமரவீரா கூறினார்.

ஜனநாயகரீதியில், இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்வகையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேஅரசு உறுதியாக இருப்பதாகவும் சமரவீரா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி பிரச்சினையை பெரிதுபடுத்தி வந்தாலும் கூட,இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், அரசில்ரீதியாக இதற்குத் தீர்வு காணவும் உறுதியாக இருப்பதாக சமரவீரா கூறினார்.

இனப் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசு காட்டும் உறுதிப்பாட்டை இந்திய அரசுஆதரிப்பதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மோதல்போக்கைக் கைவிட்டு விட்டு இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் நார்வேதலைமையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ன்வர வேண்டும் என்றுசமரவீராவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் அப்பாவி மக்கள்கொல்லப்படுவது கவலை தருவதாகவும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மிகவும்முக்கியமானது. இதை இரு தரப்பும் மறந்து விடக் கூடாது என்றும் இந்தியாகண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

ஒன்றுபட்ட இலங்கை என்ற கோட்பாட்டை இந்தியா ஆதரிப்பதாகவும் தமிழகஅரசியல் கட்சிகளின் உணர்வுகளையும் இந்த சமயத்தில் இலங்கை அதிபரிடம்தெரிவிக்குமாறும் சமரவீராவிடம் மன்மோகன் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் குண்டுவெடிப்பு:

இந் நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்து.

கடந்த ஓரிரு நாட்களாக ராணுவம், புலிகள் தரப்பில் மோதல்கள் நின்றிருந்த நிலையில்இன்று காலை கொழும்பு நகரில் வெலிசாரா என்றஇடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுவெடித்தது.

இந்த இடத்திற்கு அருகேதான் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் ஆகியவைஉள்ளன.

இச் சம்பத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.ஐரோப்பிய கண்காணிப்பாளர்களை நீக்க ஒப்புதல்:

இந் நிலையில் தங்களுக்குத் தடை விதித்த நாடுகள் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையைஇலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து டென்மார்க், பின்லாந்த், ஸ்வீடன் ஆகிய நாட்டு பிரதிநிதிகள் இந்தக்கண்காணிப்புக் குழுவில் இருந்து நீக்கப்படுவர்.

ஈழத் தமிழர் ஆதரவு பேரணி:

இதற்கிடையே சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு பேரணி தொடர்பாக வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 1983ம் ஆண்டு நடந்த இலங்கை இனவெறிப் போரைப் போல இப்போதும்அங்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் மீது சிங்களப் படையினர்தொடர்ந்து வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானதமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.

இலங்கை அரசின் இத்தகைய வன் கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், தமிழ்மக்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகஅரசுக்கும், மத்திய அரசுக்கும் உண்டு.

இதில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கைதெரிவிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும்வகையில், ஜூலை 8ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்துவதாகஅறிவிக்கப்பட்டுள்ள பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை அனைத்துக் கட்சிப் பேரணிமற்றும் பொதுக் கூட்டமாக நடத்த விரும்புகிறோம்.

இதுதொடர்பாக வரும் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில்நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் அனைத்துக் கட்சி கலந்துரையாடல்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அனைத்துக் கட்சியினைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X