• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெ. அரசின் கோப்புக் குழப்பம்!

By Staff
|

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முக்கியமான கோப்புகளை கையாண்ட விதம்குறித்து சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி விவரித்தார்.

சென்னை தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலவர்கருணாநிதிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாராட்டை ஏற்று கருணாநிதி உரையாற்றுகையில், கடந்தி சில நாட்களாககோப்புகளைப் பார்க்கும் பாக்கியம் உங்களால், மக்களால் எனக்குக் கிடைத்துள்ளது.

நான் சில கோப்புகளைப் பார்த்தேன். அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்கக் கூடாது என்பதற்காக இதைச்சொல்லுகிறேன்.

முதலில் வருவாய்த்துறை கோப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம்வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய வெங்கடேசன்என்பவர் திருட்டு மணல் லாரிகளைப் பிடிக்க முயன்றபோது கடந்த 2004ம் ஆண்டுடிசம்பர் 11ம் தேதி லாரி மோதி இறந்தார்.

கோப்பிலே மோதி என்று உள்ளது. அது மோத விடப்பட்டு என்று இருந்திருக்கவேண்டும். அகால மரணம் அடைந்ததால் அவரது மனைவி நிர்மலா, முன்னாள்முதல்வரிடம கருணை அடிப்படையில் தனது மகளுக்கு வேலை வழங்குமாறுகோரியிருந்தார்.

வெங்கடசேனின் மகள் ஆஷாவுக்கு இளநிலை உதவியாளர் பணியை வழங்கலாம்என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரும், அப்போதைய முதல்வருக்குப்பரிந்துரைத்துள்ளார்.

இந்தக் கோப்பு 2005ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதியே அனுப்பப்பட்டு விட்டது.ஆனால் இக்கோப்பில் கடைசி வரையில் அம்மையார் கையெழுத்திடவே இல்லை.

இப்போதுதான் அந்தக் கோப்பு எனது பார்வைக்கு வந்தது. நேற்று தான் அந்தக்கோப்பில் கையெழுத்திட்டு அப்பெண்ணுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கஆணையிட்டேன்.

நான் ஒரு நாளைக்கு சில மணி நேரம்தான் வேலை செய்கிறேன். ஆனால் சிலரோ 20மணி நேரம் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அப்படி வேலை பார்த்தும் கோப்பில்கையெழுத்திட முடியாத ஒரு சூழ்நிலை.

இதேபோல ஒரு கோப்பில் சுனாமி நிவாரணப் பணிக்காக உலக வங்கியிடமிருந்துபெற்ற கடன் மற்றும் மானியத் தொகை ரூ. 1,852 கோடி என்று உள்ளது.

இது உலக வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட தொகை. இந்தக்கோப்பிலும் அம்மையார் கையெழுத்திடவில்லை. அதன் பின்னர் 6 மாதம் கழித்துகடந்த ஜனவரி மாதம் முதல்வரின் ஒப்புதலுக்காக பின்னேற்பு என்று குறிப்பு எழுதிஅனுப்பியுள்ளனர்.

அதிலும் அவர் கையெழுத்திடவில்லை. கையெழுத்தே போடாமல் திருப்பி அனுப்பிவிட்டார். நேற்று ஒரு கோப்பு என்னிடம் வந்தது. 153 காவல்துறையைச் சேர்ந்தவர்கள்குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்குவது தொடர்பாக கையெழுத்துகேட்டு அந்தக் கோப்பு வந்திருந்தது.

காவல்துறை நண்பர்களுக்குத்தான் ஏற்கனவே நிதி வழங்கப்பட்டு விட்டதே, இதுஎன்ன என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள், இந்தக் கோப்பிலேமுன்னாள் முதல்வர் கையெழுத்திடவில்லை.

கையெழுத்திடாமலேயே நிதி வழங்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். அதாவது உரியஆணையே இல்லாமல் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோல இனியும் நடைபெறக்கூடாது.

அரசு ஊழியர்கள, ஆசிரியர்கள், கடந்த 2003ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு நாள்அடையாள வேலைநிறுத்தம், அதைத் தொடர்ந்து நடந்த காலவரையற்றவேலைநிறுத்தம் ஆகிய நாட்களின்போது வேலைக்கு வராமல் இருந்ததறகாகமுந்தைய அரசால் பிடிக்கப்பட்டிருந்த சம்பளத்தை மறுபடியும் வழங்கஆணையிட்டுள்ளேன்.

அதேபோல தலைமைச் செயலக ஊழியர்கள் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும் என்று இருந்த உத்தரவையும் நீக்கியுள்ளேன். காலையில் மட்டும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டால் போதும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X