• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஜக் ஆட்டம்-மஜா போஸ்: போலீஸ் வேட்டையில் சிக்கிய அழகிகள்!

By Staff
|

சென்னை:

கலாச்சார நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடியும், நிர்வாண போஸ்கொடுத்தும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை போலீஸார் தடுத்து நிறுத்தி 16 அழகிகளைக்கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள சாலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலை. இந்தசாலையில் ஸ்ருதி பேலஸ் என்ற ஒரு ஹோட்டல் உள்ளது.

இங்கு கலாச்சார நடனம் ஆடுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்தஹோட்டலின் மாடியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது.

மேலும், இந்த ஹோட்டலுக்கு பல குற்றவாளிகளும் வந்து பணத்தை வாரி இறைத்துஆபாச நடனத்தை ரசித்துப் பார்ப்பதாகவும், பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவோருக்கு இது சந்திப்பு மையமாகவும் விளங்குவதாகவும் போலீஸாருக்குத்தகவல்கள் கிடைத்தன.

இதேபோல சாந்தி தியேட்டருக்கு அருகே உள்ள வணிக வளாகம் ஒன்றின்மேல்தளத்திலும் ஆபாச நடனம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் இந்த இரு விடுதிகளையும் முற்றுகையிட்டு நடவடிக்கைஎடுக்க முடிவு செய்தனர். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, முத்துவேல் பாண்டி, கல்யாணி, மகாலட்சுமிஆகியோர் தலைமையிலான போலீஸ் படை அதிரடியாக இருஹோட்டல்களுக்குள்ளும் புகுந்தது.

இரவு 11 மணிக்கு உள்ளே புகுந்த போலீஸாரைப் பார்த்ததும் அங்கு ஆபாசமாகநடனம் ஆடிக் கொண்டிருந்த அழகிகள் அரை குறை ஆடைகளுடன் ஓட்டம்பிடித்தனர். அவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

இரு ஹோட்டல்களிலும் மொத்தம் 19 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில்அழகிகள் 16 பேர். திரைப்பட துணை நடிகை நிஷா, ரூபா, அஞ்சலி, சுதா, சாந்தினி,தேவி, ஸ்ரீலதா, கவிதா, ரம்யா, பிரியா, இன்னொரு நிஷா, ரேஷ்மா, லதா, இன்னொருதேவி, விஜிஸ்ரீ, பூனம் ஆகியோர் பிடிபட்ட அழகிககள்.

இவர்களில் வடபழனி நிஷா, சாலிகிராமம் தேவி, பிரியா, பெங்களூர் நிஷா, லதாஆகியோர் திரைப்பட துணை நடிகைகள் ஆவர். இவர்களுடன் இரு ஹோட்டல்களின்மேலாளர்கள் 3 பேரும் சிக்கினர்.

அனைவரையும் அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு முதலில் போலீஸார் கொண்டுசென்றனர். அழகிககள் முகத்தை மூடியபடி அணிவகுத்து காவல் நிலையத்திறகுள்கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்து அங்கு பொதுமக்கள் ஏராளமான பேர் கூடிவிட்டனர்.

பின்னர் அனைவரையும் போலீஸார் வேனில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றனர். படு நாகரீகமான தோற்றத்தைக் கொண்ட அந்த அழகிகள் முகத்தில்கவலையோ, கலக்கமோ தெரியவில்லை.

அவர்களில் சிலர் மட்டும் அழுதபடி இருந்தனர்.அவர்களை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய பின்னர் 15 நாள் காவலில் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர்களதுசார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதைப் பரிசீலித்த நீதிபதி அனைவரையும் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இந்தஅழகிகளுக்குப் பின்னர் பல பெரும் புள்ளிகள் இருப்பதாக கருதப்படுகிறது. காரணம்இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகும் தகவல் தெரிந்ததும் ஏராளமானவழக்கறிஞர்கள் இவர்களுக்காக ஆஜராக நீதிமன்றத்தில் குவிந்தனர்.

மேலும் இவர்களது உறவினர்களும் பெருமளவில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.ஜாமீன் கிடைத்த பின்னர் அனைத்து அழகிகளும் கார்களில் ஏறி பறந்து விட்டனர்.இந்த அழகிகள் அனைவரும் முதலில் சாதாரணமாக ஆட ஆரம்பிப்பார்களாம்.

பின்னர் டப்பாங்குத்துப் பாட்டுக்கள் தொடங்கும். அப்போது தாங்கள் அணிந்துள்ளஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி பார்வையாளர்கள் மீது பரவசப்படுத்துவார்கள்.அதன் பின்னர் நிர்வாண போஸ் கொடுப்பது ஆரம்பமாகுமாம்.

போலீஸார் வேட்டைக்குச் சென்றபோது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்பாட்டுக்கு படு ஆபாசமாக ஆடிக் கொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும்உடைகளைக் கூட மாற்ற தோணாமல் அப்படியே ஓடி போலீஸாரையே பீதியில்ஆழ்த்தினார்களாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X