For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபலத்தில் விழுந்தேன்; கொலைகாரி ஆனேன்-நீதிமன்றத்தில் மேரி கண்ணீர் வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை

ஆரோக்கியதாஸ் விரித்த சபல வலையில் விழுந்து, அவர் சொல் பேச்சைக் கேட்டுகொலைகாரியாக மாறி நிற்கிறேன் என்று கணவர் மற்றும் மாமியாரைக் கொலைசெய்த வழக்கில் சிக்கியுள்ள மேரி சேவியர் நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க வாக்குமூலம்அளித்துள்ளார்.

Mary
சென்னை மாதவரம் அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அருள்நாதன். இவரதுமனைவி மேரி. ஆசிரியையான இவருக்கும், அருள்நாதனின் அண்ணன் மகன்ஆரோக்கியதாஸுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இந்த கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த அருள்நாதனின் தாயார்சவுரியம்மாளையும், பின்னர் அருள்நாதனையும் இருவரும் சேர்ந்து கொலைசெய்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேரி சேவியர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.அங்கு 2வது குற்றவியல் நீதிபதி கலைப்பொன்னி முன்பு சுமார் 2 மணி நேரம்வாக்குமூலம் கொடுத்தார். மூடிய அறைக்குள் மேரி கொடுத்த வாக்குமூலத்தில்கூறியுள்ளதாவது:

அருள்நாதனின் அண்ணன் மகன்தான் ஆரோக்கிய தாஸ். கணவரிடம் சந்தோஷமாகஇல்லாத என்னிடம், ஆரோக்கிதாஸ் இனிமையாக பழகுவார். அடிக்கடி வீட்டுக்குவருவார். அப்போது எனது வீட்டுப் பிரச்சினைகளை அவரிடம் கூறுவேன். அப்போதுஎனக்கு ஆறுதலாக பேசுவார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையேநெருக்கமான நட்பு ஏற்பட்டது.

சித்தி, சித்தி என்று என்னிடம் அன்பாகப் பழகுவார். தொட்டுத் தொட்டும் பேசுவார்.இதில் எனக்கு சபலம் ஏற்பட்டு விட்டது. அவரது வலையில் விழுந்தேன். அவருடன்வீட்டுக்குள்ளேயே உறவு வைத்துக் கொண்டேன்.

Mary with her son
நான் பள்ளிக்குச் செல்லும்போது அவருடன் மோட்டார் சைக்கிளிலேயே செல்வேன்.பள்ளிக் கூடத்திற்கு விடுமுறை போட்டு விட்டு அடிக்கடி வெளியே சுற்றினேன். அதுஎனக்கு புது அனுபவமாக இருந்ததோடு, சுகமாகவும் இருந்தது. வீட்டுக்குத்தெரியாமல் இந்தக கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.

எவ்வளவுதான் வெளியில் சுற்றினாலும் வீட்டுக்குள் சந்தோஷமாக இருக்கமுடியவில்லை. அதற்கு எனது மாமியார் சவுரியம்மாள் இடையூறாக இருந்தார்.வீட்டுக்குள் நினைத்த நேரத்தில் உல்லாசமாக இருக்க முடியாமல் தவித்தோம்.

இந் நிலையில்தான் சவுரியம்மாளை தீர்த்துக் கட்டி விட்டால் சந்தோஷமாக இருக்கமுடியும் என்று ஆரோக்கியதாஸ் கூறினார்.

ஆனால் அது தவறு, ஒளிவுமறைவாக இருந்து கொள்வோம், கொலையெல்லாம்வேண்டாம் என்று நான் தாஸைத் திடடினேன். ஆனால் அவர் எனது மனதைக் கரைத்துமாமியாரைக் கொல்ல சம்மதம் பெற்றார். பின்னர் திட்டமிட்டு அவரைக் கொன்றேன்.தாஸுக்கு நானும் உடந்தையாக இருந்தேன்.

மாமியாரைக் கொன்றது எனக்கு உறுத்தியது. தவறான தொடர்பால் தடம் மாறிச்செல்கிறோமே என்று மனதுக்குள் அழுதேன். தாஸுடன் இருந்த தொடர்பைத்துண்டித்துக் கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் தாஸின் சுயரூபம் தெரியவந்தது.

மாமியாரைக் கொன்றதை எனது கணவரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டி அடிக்கடிபணம் பறிக்க ஆரம்பித்தார். அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன்,என்னையும் கொடுத்தேன். தேவைப்பட்ட நேரம் எல்லாம் என்னை அனுபவித்தார்.

இனியாவது நம்மதியாக வாழ விடு என்று கெஞ்சினேன். ஆனால் தாஸின் திட்டம்வேறாக இருந்தது.

எனது கணவரையும் கொன்று விட்டு தனக்கு மனைவியாகும்படி வற்புறுத்தினார். நான்முடியாது என்று மறுத்து விட்டேன். அதற்கு தாஸ், இதுவரை உன்னை அனுபவித்தது,உனது மாமியாரைக் கொன்றது எல்லாவற்றையும் உனது கணவரிடம் கூறி விடுவேன்என்று மிரட்டினார்.

எனக்கு நீ வேண்டும், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் உனது கணவரை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது தொடர் மிரட்டலுக்குப்பயந்து நானும் ஒத்துக் கொண்டேன்.

தாஸ் திட்டப்படியே, சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து எனதுகணவரையும் கொன்றேன். பின்னர் கொள்ளையர்கள் கொன்று விட்டதாகநாடகமாடினேன்.

சபலத்திற்கு ஆளாகி, எனது வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டு என்னைகொலைகாரியாகவும் ஆக்கி விட்டார் தாஸ் என்று கூறியுள்ளார் மேரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X