For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்லவர்கள் இணைந்து தீய சக்திகளை அழிக்க வேண்டும்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

தீய சக்திகளை அழிக்க நல்லவர்கள் இணைந்து போராட வேண்டும் என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 11ம் தேதி மாலை 6 மணிக்கு அடுத்தடுத்துகுண்டுகள் வெடித்ததில் 200 பேர் பலியாயினர். இதில் காயமடைந்த 700க்கும்மேற்பட்டோர் மும்பை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மும்பைவந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர்விலாஸ்ராவ் தேஷ்க் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கெம் மருத்துவமனைக்கு கலாம் சென்றார். அங்கு காயமடைந்துஅனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார். மருத்துவமனை டீனிடம்சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கலாம் பேசுகையில், நோயாளிகளாகஅனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தேறி வருகிறார்கள். அவர்களின் வேதனையைஉணர்ந்தேன். மன நிலை பாதித்த, மனிதநேயமற்ற மனிதர்களின் மனதில்உதிப்பதுதான் தீவிரவாதம்.

நல்லவர்கள் ஒன்று சேர்ந்து இத்தகைய தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்றார்கலாம். இதன் பின்னர் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திற்குக் கலாம் சென்றார். இன்றுமும்பை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மாலை 6.25 மணிக்கு நடைபெறும் மெளன அஞ்சலி நிகழ்ச்சியில் கலாம்கலந்து கொள்கிறார். 6.25 முதல் 6.27 வரை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்குமும்பை நகரம் முழுவதும் மெளன அஞ்சலி செலுத்துகிறது.

இதற்கிடையே, இந்தித் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட 2 நிமிடஇரங்கல் நகழ்ச்சியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா ழுவதும்உள்ள 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் மாலை 6 மணிக்கும் பின்னர்இரவு 9 மணிக்கும் ஒரே சமயத்தில் ஒளிபரப்பவுள்ளன.

தி வாய்ஸஸ் ஆப் இந்தியா (இந்தியாவின் குரல்) என்று இந்த நிகழ்ச்சிக்குப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் மும்பைசென்ற பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பேசியதிலிருந்து சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், ஆமிர்கான், பர்தீன் கான், அணில்கபூர், யாஷ் சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, நானா படேகர், கரன் ஜோகர் உள்ளிட்ட திரையுலகபிரபலங்களின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய மக்கள் அத்தனை பேரும் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 2 நிமிட நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நிலையங்கள், ஸ்டார் டிவி குழுதொலைக்காட்சிகள், ஜீ டிவி, சோனி டிவி, டைம்ஸ் குழுமம், ஈடிவி, எம்.டிவி, டிவி 18குழுமம், என்டிடிவி, ஜன்மத் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள்ஒளிபரப்புகின்றன.

இதற்கிடையே, மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில், ஆர்.டி.எக்ஸ் மற்றும்அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருட்களை கலந்து வெடிகுண்டுகள்உருவாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை ரயில்களில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் எதனால்செய்யப்பட்டவை என்பது குறித்து உறுதியாக தெரியாமல் இருந்து வந்தது. தற்போதுஇது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு இணை ஆணையர் ரகுவன்ஷிகூறுகையில், ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் ஆகியவெடிபொருட்களை கலந்து வெடிகுண்டுகளை தயார் செய்துள்ளனர்.

மிகச் சிறிய அளவிலான குண்டுத் துகள்களையே எங்களால் சேகரிக்க முடிந்தது.மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டியிருந்ததால்வெடிகுண்டுகளின் மிச்சத்தை அதிக அளவில் சேகரிக்க முடியாமல் போய் விட்டது.

டைம் பாம் எனப்படும் முன்கூட்டியே நேரத்தை கணக்கிட்டு வெடிக்கச் செய்யும்குண்டுகளையும் கூட தீவிரவாதிகள் பயன்படுத்தியிருக்கக் கூடும். தொடர்ந்துவிசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து உறுதியாக கூற முடியவில்லை.

திரிபுராவில் 11 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிர மாநிலம்தானே மாவட்டத்தைச் சேர்ந்த மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். வங்கதேசத்திற்குள்நுழைய முயன்றபோது இவர்களை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்த ஒரு குழு மும்பையிலிருந்து திரிபுரா சென்றுள்ளது.வெடிகுண்டு வைத்தது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.விசாரணையை அனைத்துக் கோணங்களிலும் முடுக்கி விட்டுள்ளோம்.

விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்ரகுவன்ஷி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X