For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுமாறன் மாநாட்டுக்கு தடை-வைகோ கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பழ. நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழ் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை கொண்டு அமைக்கப்பட்ட உலகத்தமிழர் கூடடமைப்பின் சார்பில் சேலத்தில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன.உலகம் முழுவதிலும் இருந்து பலவேறு தமிழறிஞர்கள் இம்மாநாட்டில்கலந்து கொளளதிட்டமிட்டிருந்தனர். இந் நிலையில் மாநாட்டுக்கு அனுமதி அளிக்க சேலம்காவல்துறை மறுத்து விட்டது.

வெளிநாட்டுத் தமிழர்கள் குறிபபாக இலங்கையிலிருந்து வரும் தமிழறிஞர்களின்விசாக்கள் குறித்த தகவல்கள் சரியாக தரப்படவில்லை என்று காரணம் காட்டிமாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசின் இந்தத் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தஅமைப்பின் செயலாளர் பத்மநாபன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், எங்களது கூட்டமைப்பு சார்பில், சேலம் அழகாபுரத்தில் உள்ள ரத்தினவேல்திருமண மண்டபத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டிற்குஅனுமதி கேட்டு சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் கடந்த 8ம் தேதிவிண்ணப்பம் அளித்தோம்.

ஆனால் ஆணையர் அனுமதி தரமறுத்து விட்டார். எனவே மாநாடு நடத்த அனுமதி தரஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

வைகோ கண்டனம்:

தமிழக அரசின் நடவடிக்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிககையில்,

உலகத் தமிழர் கூடடமைப்பின் மாநாட்டுக்கு தடை விதித்துள்ளதுகண்டனத்துக்குரியது. நியாயப்படுத்த முடியாத சொத்தை காரணங்களைக் கூறிஅனுமதி தர காவலதுறை மறுததுள்ளது.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரிலேயே இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தமிழ் இனத்துக்கும், உலகத் தமிழர்களுக்குமஎதிரான நடவடிக்கையாகவே இதனைக் கருதி, தமிழக அரசுக்கு பலத்த கண்டனத்தைத்தெரிவிப்பதோடு,

மாநாட்டுக்கான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அப்படிவழங்காவிட்டால், மக்கள் ஆட்சியில் கருத்து உரிமையை, பேச்சு உரிமையைபாதுகாப்பதற்கு மதிமுக தனது கடமையைச் செய்யும் என்றும் கூறியுள்ளார் வைகோ.

புலிகளால் அச்சுறுத்தல் இல்லை-நாராயணன்

இந் நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசியதேசிய பாதுகாப்புச் செயலாளர் நாராயணன்,

புலிகள் மீதான தடை நீக்கப்படாது. இதில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருமித்தகருத்தே நிலவுகிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடாது. இருந்தாலும் இந்தப்பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என இலங்கைகருதுகிறது.

இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு வேண்டும் என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.இதனால் அவர்களால் தமிழகத்துக்கு எந்த அச்சுருத்தலும் இல்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X