விவேகானந்தர் பாறையில் பரிதவித்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் 1,000 பேர், மீனவர்கள் கடலில் நடத்தியதிடீர் போராட்டத்தால் கரைக்குத் திரும்ப முடியாமல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பரிதவித்தனர்.

கனனியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை, குளச்சல் முட்டத்தைச் சேர்ந்தமீனவர்கள் 50 படகுகளில் சென்று தாக்கினர். சின்னமுட்டம் மீனவர்களின் 2 படகுகளையும் சேதப்படுத்தியதோடு23 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.

இதனால் சின்னமுட்டம் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு பிடித்துச் செல்லப்பட்ட23 மீனவர்களையும் நேற்று அதிகாலை விடுவித்தனர்.இந்த நிலையில், தங்களது கிராம மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்தம், சேதப்படுத்தப்பட்டபடகுகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரியும் நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியிலவிவேகானந்தர் பாறையைச் சுற்றிலும் படகுகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் குதித்தனர் சின்னமுட்டம்மீனவர்கள்.

இந்த கடல் மறியலால் விவேகானந்தர் பாறைக்குச் சுற்றுலா சென்ற பயணிகள் கரைக்குத் திரும்ப முடியாமல்தடுக்கப்பட்டனர். அவர்களை அழைத்து வரச் சென்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகையும்மீனவர்கள் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

மேலும் வேறு படகுகள் வராமல் தடுக்க மீன் பிடி வலைளையும் கடலில் போட்டு வைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சின்ன முட்டம் மீனவர்களுடன் பேச்சுநடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக போராட்டம் நடந்ததால் விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுமார் 1,000பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

அவர்களுக்கு டீ, பிஸ்கட் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன்பேச்சு நடத்தி, அவர்களது பிரச்சினைக்கு தீர்வ காணப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் படிப்படியாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இரவு 7 மணியளவில் தான்அனைத்து பயணிகளும் கரைக்குத் திரும்ப முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+