ஃப்ரீ கேபிள் இணைப்பும் வேண்டும்: விஜயகாந்த்
சென்னை:
இலவச டிவி வழங்குவதோடு நில்லாமல் கேபிள் இணைப்பையும் இலவசமாகவழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபைசயில், உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விஜயகாந்த் பேசினார். அப்போது, சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும்,மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் கிராமங்களின் வளர்ச்சிககாக இந்த அரசுஎன்ன செய்யப்போகிறது என்பது தான் தமிழக மககளின் இன்றைய கேள்வியாகும்.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தலா ரூ.20 லட்சம்ஒதுக்கி அடிப்படை வசதிகள் வழங்க இருப்பது வரவேற்புகுரிய திட்டம். இந்தபணத்தை நேரடியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்க வேண்டும்.வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் கட்சி குறுக்கீடு இல்லாமல் கிராமங்களில்கேட்டு அறிந்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.
அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்க வேண்டும். பயனாளிகள் யார்என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். இலவச டிவி திட்டம் ல்ல திடடம்தான். அரசின் கணக்குப்படி பார்த்தால் 40 லட்சம் குடும்பங்களுக்கு டிவி கிடைக்கும்.அத்தியாவசியச் செலவுக்கே போதிய வருமானம் இலலாத ஏழைகளின் டிவிபெட்டிக்கு இலவச மின்சாரம் வழங்குவதை வரவேற்கிறேன்.
ஆனால் கேபிள் கட்டணமாக அவர்களால் எப்படி ரூ. 100 கட்டடியும்? இந்தத்தொகை மேலும் அதிகரித்தால் என்ன செய்வது? எனவே இதை கருத்தில் கொண்டுகேபிள் கட்டணத்தையும் அரசே செலுத்தி வாழ்க்கையை சுமையை குறைக்கவேண்டும்.
விருத்தாச்சலம் தொகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தவேண்டும். இந்த நகரம் மிகவும் பழமை வாய்ந்தது. பல பழமையான ஆலயங்கள்உள்ளன. எனவே விருத்தாச்சலத்தை பாரம்பரியம் மிக்க நகரமாக அறிவித்து மத்தியஅரசின் நிதியையும் பெற வேண்டும்.
சமையல் எரிவாயு அடுப்புத் திட்டம் குறித்து திமக தேர்தல் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இதுவரை அரசு சார்பில்எந்த அறிவிப்பும் வராதது வருத்தம் அளிக்கிறது என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த் நீளமாக பேசிக் கொண்டிருப்ப்தைப் பார்த்த சபாநாயகர் ஆவுடையப்பன் ,விஜயகாந்த் பேச்சை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றார். அதைக் கேட்ட விஜயகாந்த்,இந்த அவையில் நான் சிறுபான்மையாக இருக்கிறேன். இந்த அரசு சிறுபான்மைமக்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசு. எனவே என்னை முழுமையாக பேச அனுமதிக்கவேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications