விமான நிலையத்தில் பெண் ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை:
மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பெண் பயணி, விமான நிலையத்தில், கஸ்டம்ஸ்சோதனையின்போது கோபமாகி சேலை, ஜாக்கெட்டை கழற்றி வீசிவிட்டு கதறி அழுததால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம், கஸ்டம்ஸ் ஊழியர்கள் சோதனைநடத்தினர். அப்போது ஒரு பெண் பயணியிடம் சோதனை நடத்தினர்.அப்போது அந்தப் பெண் கோபமடைந்தார். அங்கேதான் படாதபாடு பட்டு இங்கே வந்துள்ளோம். இங்கேயும்சோதனையா என்று கேட்டபடி தனது சேலையை கழற்றி எறிந்தார். பின்னர் ஜாக்கெட்டையும் கழற்றினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய பெண் ஊழியர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை தடுக்கப்பார்த்தனர்.ஆனால் அவர்களைதள்ளிவிட்ட அப்பெண் ஜாக்கெட்டையும் கழற்றி கீழே எறிந்தார்.
சில்லறைத்தனமாக ஏன் சோதனை போடுகிறீர்களே, எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறேன். எல்லோரும்பாருங்கள் என்று அழுதபடி அவர் ஆவேசமாக கூச்சலிட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
விமான நிலைய பெண் ஊழியர்கள் கஷ்டப்பட்டு சேலையையும், ஜாக்கெட்டையும் போட்டு விட்டனர். அவர்மன நோயாளியாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாகள் விமான நிலைய டாக்டரை அழைத்துபரிசோதித்தனர்.
ஆனால் அந்தப் பெண் நல்ல மனநிலையில்தான் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணின்பெயர், விலாசத்தைக் கூறி அவரை வரவேற்க யாராவது வந்துள்ளீர்களா என மைக் மூலம் அழைத்தனர். இதைத்தொடர்ந்து சாந்தி என்பவர் அங்கே வந்தார்.
சேலை, ஜாக்கெட்டை வீசிய பெண்ணின் அக்கா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் சாந்தி. அவரைப்பார்த்ததும் அந்தப் பெண் ஓவென கதறி அழுதார். சம்பந்தப்பட்ட பெண் திருவண்ணாமலை மாவட்டம்தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர். கணவரை இழந்தவர்.
மஸ்கட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். சென்ற இடத்தில் அவர்கொடுமைப்படுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு நடந்திருக்கலாம் என கூறிய சாந்தி, வழக்கு ஏதும்பதிவு செய்து விடாதீர்கள் எனவிமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சினார் சாந்தி.
இதைத் தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அப்பெண்ணை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அந்தப் பெண்ணின் நலன் கருதி பெயர்,விவரம் மறைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications