சோனியாவுக்கு ஆதரவு அதிகரிப்பு-கருத்துகணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவுஅதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

சிஎன்என்-ஐபிஎன் டிவி சேனல், இந்து நாளிதழ், சென்டர் பார் ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ் ஆகியவைஇணைந்து கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை பல மாநிலங்களில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தின.

19 மாநிலங்களில் மொத்தம் 14,680 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில்,

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பலவிதத்திலும் சிறப்பாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலில் 189 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் இப்போது தேர்தல்நடத்தப்பட்டால், 120 தொகுதிகள் தான் அந்த கூட்டணிக்கு கிடைக்கும் எனவும், இப்போது வென்றுள்ள 60தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தக்க வைத்துக் கொள்ளும் என்று அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 306க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும்என்றும் (கடந்த தேர்தலில் 222 இடங்களே கிடைத்தன), காங்கிரசுக்கு மட்டும் 240 இடங்கள் கிடைக்கும் என்றும்தெரிய வந்துள்ளது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி 141 இடங்களில் மட்டுமே வென்றது.

சோனியாவின் செல்வாக்கு அதிகாரிப்பு

பிரதமர் பதவியை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கே அதிக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் சோனியாவுக்கு 23.8 சதவீத ஆதரவு இருந்தது.

இப்போது 27.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இருந்த 19.3 சதவீதஆதரவு, 18.5 சதவீதமாக குறைந்துள்ளது. 8.6 சதவீத ஆதரவு பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங். இப்போது12 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

4வது இடத்தில் கருணாநிதி:

இந்தக் கருத்துக் கணிப்பில் சிறந்த முதல்வர்கள் யார் என்றும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் தமிழகமுதல்வர் கருணாநிதி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், இரண்டாவது இடத்தை ஒரிசா முதல்வர்நவீன் பட்நாயக்கும், 3வது இடத்தை மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+