For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களே, மோசம் போய்ட்டீங்க.. ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு இலவச திட்டங்களை அறிவிப்பது திட்டமிட்டே மக்களை ஏமாற்றும்செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுகந்திர தினவிழா நிகழ்ச்சியில் எழுதி வைத்த உரையை வாசித்த மைனாரிட்டி திமுகஅரசின் முதல்வர் கருணாநிதி, தமிழ் நாட்டில் விறகு மற்றும் மண்ணெண்ணைய்அடுப்புகளை பயன்படுத்தும் அனைத்து ஏழை, எளியவர்களின் இல்லங்களுக்கும்இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பும், எரிவாயு அடுப்பும் வழங்கப்படும் என்றுஅறிவித்திருக்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்புஇலவசமாகத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மைனாரிட்டி திமுக அரசு பதவியேற்ற பின்னர், பதவி ஏற்பு விழாவிலும், ஆளுநர்உரையிலும், நிதி நிலை அறிக்கையிலும் இது குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில்தொடர்ந்து எதிர்கட்சித் தரப்பிலிருந்து என்னவாயிற்று இலவச கேஸ் அடுப்பு? என்றுதிரும்பத் திரும்ப கேட்கப்பட்டது.

கடந்த 3 மாத காலமாக மெளனம் சாதித்த கருணாநிதி இப்போது ஒரு அறிவிப்பைசுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் வெளியிட்டிருக்கிறார்.

மைனாரிட்டி திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் திட்டங்களுக்குப் போதுமான நிதிஒதுக்கப்படவில்லை. எந்த திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்த தேவையானஅளவிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

ஒவ்வொரு திட்டத்திற்கும் பன்னீர் தெளிப்பது போல், குறைந்த அளவில் நிதியைஒதுக்கிவிட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போல் நாடகமாடுகிறார் கருணாநிதி.இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன் அடையவேண்டிய திட்டங்களின் பயன்கள் எதுவும் மக்களுக்குப் போய்ச் சேருவதாகத்தெரியவில்லை.

இவரது அறிவிப்புகள் எல்லாமே வெறும் கண்துடைப்பாக உள்ளன என்பதை பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். உதாரணத்திற்கு கருணாநிதி வேலை வாய்ப்பற்றகோடிக்காணக்கான இளைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் என்றுதேர்தல் வாக்குறிதி அளித்தார்.

ஆனால் நிதி நிலை அறிக்கையில் இதற்காக வெறும் ரூ. 110 கோடி அளவுக்குசொற்பமான தொகையையே ஒதுக்கியிருக்கிறார். அதுவும் கல்வித் தகுதியின்அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.150, ரூ.200, ரூ.300என்பது யானைப்பசிக்கு சோளப் பொறியாக உள்ளது.

அதுவும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த உதவிகள் வழங்கப்படுமாம். இதிலும் 5ஆண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்குத் தான்வழங்கப்படுமாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 110 கோடி மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளதால் ஏறக்குறைய 4 லட்சம் பேர்களுக்குத் தான் இந்த உதவிகிடைக்கும்.

இது எப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலையில்லாத படித்தஇளைஞர்களுக்கும் போதுமானதாக இருக்க முடியும். தகுதியுடையபெரும்பாலானவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்பது தான் உன்மை.

வேலை வாய்ப்பு அலுவலக்த்தில் 50 லட்சம் பேருக்கு மேல் பதிவு செய்து,வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஆக இது படித்து வேலையற்ற இளைஞர்களைஏமாற்றும் திட்டம்.

இது போன்று, கலர் டிவி இல்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக கலர் டிவிவழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேஅறிவித்திருந்தார் கருணாநிதி.

இதுபற்றிக் கேட்டதற்கு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 53 லட்சம் பேருக்குகொடுப்போம் என்று தேர்தல் சமயத்திலே சொன்னார். ஆனால் அது கழுதை தேய்ந்துகட்டெறும்பு ஆன கதையாக குறைந்து வெறும் 30,000 பேருக்கு மட்டும் தான்வழங்கப்படும் என்கிறார் இப்போது.

இது போலவே, நிலமற்ற ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் 2 ஏக்கர்நிலம் வீதம் இலவசமாக வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறியில் கூறினார். அதன்பின்னர் 5 லட்சம் பேருக்கு நிலம் கொடுக்கப் போவதாக கணக்கு கூறினார்.

கடைசியாக எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என்றுமக்களைக் குழப்பிய கருணாநிதி. கீழே குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ஒட்டவில்லை என்கிற கதையாக தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

தற்போது தமிழ்நாட்சில் விறகு மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளை பயன்படுத்தும்அனைத்து ஏழை, எளியவர்களின் இல்லங்களுக்கும் இலவசமாக சமையல் எரிவாயுஇணைப்பும், இலவசமாக எரிவாயு அடுப்பும் பொங்கல் திருநாளில் இருந்துகொடுக்கப் போவதாக கூறி இருக்கிறார்.

ஒரு எரிவாயு இணைப்புக்கு ரூ.1,000 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஒருஎரிவாயு அடுப்பின் விலை குறைந்த பட்சம் ரூ. 500 ஆக ஒரு இல்லத்திற்குதோரயமாக ரூ. 1,500 தேவைப்படும்.

இந்த திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கருணாநிதிஅறிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் விறகு மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளைபயன்படுத்தும் குடும்பங்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றன.

ஆனால் கருணாநிதியின் அறிவிப்பின் படி ரூ. 150 கோடி செலவில் சுமார் 10 லட்சம்குடும்பங்கள்தான் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைய முடியும். தமிழ்நாட்டில்உள்ள விறகு மற்றும் மண்ணெண்ணைய் அடுப்புகளை பயன்படுத்தும்கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த திட்டம் சென்றடையுமா? என்பது திமுகஆட்சியின் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கே வெளிச்சம்.

திட்டங்களை அறிவித்து விட்டாலே அவை மக்களைச் சென்றடைந்து விட்டதாகவும்,அனைத்து மக்களும் அந்த திட்டங்களின் முழுப் பயனையும் அடைந்து விட்டதைப்போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தப் பார்ககிறார் கருணாநிதி.

போதிய நிதியை ஒதுக்காமல் இலவசத் திட்டங்களை அறிவிப்பது தமிழக மக்கள்அனைவரையும் சென்றடைக் கூடியதாக இல்லை. இது தமிழக மக்களை திட்டமிட்டேஏமாற்றும் ஒரு செயல். இத்தகைய திட்டங்களை தமிழக மக்களுக்கா? அல்லதுதிமுகவினருக்கு மட்டுமா?

கருணாநிதி இவ்வாறு தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு முடிவே இல்லையா?தாங்கள் மோசம் போய் விட்டதை உணரும் போது இதற்கெல்லாம் மக்கள்கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X