குற்றாலத்தில் குடிபோதையில் போலீஸ் கமிஷனர்ரகளை-பெண்கள் முன் ஜட்டி குளியல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

குடிபோதையில் குற்றாலத்தில் ஜட்டியுடன் குளித்தும், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர் ஆகியோரை அடித்தும்திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் பி.கே.ரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நெல்லை மாநகர ஆணையராக இருந்து வருபவர் பிராஜ் கிஷோர் ரவி. இவர் ஞாயிற்றுக்கிழமை காலை செங்கோட்டைஅருகே உள்ள குண்டாறு என்ற இடத்திற்குச் சென்றார். அவருடன் 2 உதவி ஆணையர்களும், ஒரு இன்ஸ்பெக்டரும்(எடுபிடிகளாக) உடன் சென்றனர்.

குண்டாறில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான பங்களாவில் இரவு தங்கினர்.

திங்கள்கிழமை காலை செங்கோட்டையிலிருந்து காரில் கிளம்பினர். பங்களாவிலேயே நன்கு குடித்து விட்டு போதையுடன் தான்கிளம்பினார் ரவி. வழியில் உதவி ஆணையர்களுடனும், இன்ஸ்பெக்டருடனும் தாறுமாறாக பேசியபடி வந்துள்ளார் ரவி.

ஒரு கட்டத்தில் உதவி ஆணையர்களை அசிங்கமாகவும் பேசியதாகத் தெரிகிறது.ரவியின் நிலையைப் பார்த்த உதவி ஆணையர்ஒருவர் நெல்லை சரக டிஐஜி மாகாளிக்குப் போன் செய்தார்.

இதையடுத்து மாகாளி, நெல்லை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனுக்குப் போன் செய்து, ரவியை பத்திரமாக திரும்பி அழைத்துவருமாறு உத்தரவிடடார்.

ஆனால் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த காரை, குற்றாலத்தில் நிறுத்துமாறு ரவி உத்தரவிட்டார். கார்நிறுத்தப்பட்டவுடன் அருவிக்குச் சென்றார்.அங்கு ஏராளமான பொது மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பற்றி கவலைப்படாது, தான் அணிந்திருந்த உடைகளை களைந்துவிட்டு வெறும்ஜட்டியுடன் (ஜட்டியுடன் குளிக்கபோலீஸ் தடை உள்ளது!) குளிக்க ஆரம்பித்தார் ரவி. இதைப் பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தனர்.

கமிஷ்னர் ரவியை அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த உதவி ஆணையர்களும், இன்ஸ்பெக்டரும், அருவியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் முயன்றனர்.

ஆனால்போதையில் முரண்டு பிடித்த ரவி, பாதுகாப்பு போலீஸாரை அடித்துள்ளார். இன்ஸ்பெக்டருக்கும் அடி விழுந்துள்ளது.மேலும் சப்தம் போட்டு கெட்ட வார்த்தைகளால் கத்தியும் உள்ளார்.

கஷ்டப்பட்டு ரவியை அமைதிப்படுத்தி காரில் ஏற்றி ஒரு வழியாக நெல்லைக்கு கொண்டு வந்தனர்.

அவரை உடனடியாக நீண்ட விடுப்பில் செல்லுமாறு சரக டிஐஜியும், தென் மண்டல ஐஜியும் உத்தரவிடடுள்ளதாகக்கூறப்படுகிறது.

நெல்லைக்கு ஆணையராக வந்தது முதலே இப்படித்தான் அடிக்கடி குடித்து விட்டு கலாடடா செய்து வருகிறார் ரவி. திமுகவிஐபிக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக பீற்றிக் கொண்டு இந்த கேவலமான செயல்களில் போலீஸ் கமிஷ்னர் ஈடுபட்டுவருகிறார்.

சமீபத்தில் தாழையூத்து என்ற இடத்திற்கு போயிருந்தார் ரவி. அப்போதும் இதே உதவி ஆணையர்கள்தான் உடன்சென்றுள்ளனர். அப்போதும் இப்படித்தான் கலாட்டாவாம்.

ரவி மீதான நடவடிக்கை குறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து டிஜிபிக்கு அறிக்கைஅனுப்பப்படும். ரவி மீது இதுபோன்ற புகார்கள் முன்பே வந்துள்ளன. அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தஉத்தரவிடப்படும்.

துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை குறித்து இப்போது முடிவு செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதுமுடிவுசெய்யப்படும் என்றார்.

பொதுமக்கள் பொது இடத்தில் ரகளை செய்தால் குண்டர் சட்டத்திலேயே உள்ளே தள்ள வழி உள்ளது. அப்படி இருக்கையில்,ஒரு மாநகரத்தின் காவல்துறை கமிஷ்னரே இப்படி நடந்திருப்பது காவல் துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+