ஐஏஎஸ் தேர்வு-தமிழக அரசு இலவச பயிற்சி
சென்னை:
2007ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்குதமிழக அரசு இலவச பயிற்சி வழங்கவுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அதிகஎண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்ய, குடிமைப் பணிகள் தேர்வு மையம் மூலம்தமிழக அரசு பயிற்சி அளிக்கவுள்ளது.சென்னை அண்ணா நகரில் உள்ள இந்த மையத்தில் தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.இங்கு விடுதி வசதியும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல்ஆகிய 3 தேர்வுகளை உள்ளடக்கியது. இதில் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசுநடத்தும் மையத்தில் 300 பேர்களுக்கு பயிற்சி தரப்படும். 200 பேர்கள்நேரடியாகவும், 100 பேர் பகுதி நேரமாகவும் பயிற்சி பெறலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். வயது 30க்குள் இருக்க வேண்டும். பிசி வகுப்பினராக இருந்தால் வயதுவரம்பு 33, எஸ்சி, எஸ்டி வகுப்பினராக இருந்தால் 35 வயது வரைவிண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ள மாணவ, மாணவிகள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுமதிப்பெண் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அடுத்த ஆண்டுநடைபெற உள்ள ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வருகிற நவம்பர் மாதம்தொடங்கி 6 மாதம் நடைபெறும்.
பயிற்சி பெற தகுதியான மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய அக்டோபர் மாதம்15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வு சென்னை, திருச்சி,மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தருமபுரிஆகிய மையங்களில் நடைபெறும்.
3 மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில் இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம்,இந்திய அரசியல், கணக்கு, அறிவியல், நாட்டு நடப்புகள் ஆகியவற்றில் இருந்துஅப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் ஜாதி, பெயர், பாலினம்,பிறந்த நாள் மற்றும், வயது கலவித்தகுதி, கும்ப ஆண்டு வருமானம், தேர்வு எழுதவிரம்பும் மையம், தொடர்பு முகவரி, முழு நேர பயிற்சி அல்லது பகுதி நேர பயிற்சிவிவரம் ஆகிய விவரங்களை வரிசையாக குறிப்பிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி,
நிகழ்ச்சி இயக்குனர்,
அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்,
225, இரண்டாவது அவென்யூ,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை 600 040.
என்ற முகவரிக்கு செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications