ஹைதராபாத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை-ஆந்திராவுக்கு இன்னொரு சிக்கல்
ஹைதராபாத்:
தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று மீண்டும் போராட்டங்கள்தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர அரசுக்கு இன்னொரு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
ஹைதாராபாத்தை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என மஜிலிஸ் பிரண்ட் என்ற முஸ்லீம் கட்சி கோரிக்கைவைத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.தெலுங்கான தனி மாநில கோரிக்கைக்கு அப் பகுதி மக்களின் ஆதரவும் நக்ஸல்களின் ஆதரவும் இருப்பதால்ஆந்திர காங்கிரஸ் அரசு பிரச்சனையில் உள்ளது. காங்கிரஸ் ஒத்துக் கொண்டால் தனி மாநில கோரிக்கையைஆதரிக்கத் தயார் என பாஜகவும் கூறிவிட்டது.
ஆனால், தனி தெலுங்கானாவை ஆதரிக்காத தெலுங்கு தேசத் தலைவர் சந்திர பாபு நாயுடு அமைதியாக உள்ளார்.இதனால் இப்போது காங்கிரஸ் மட்டுமே இந்த தனி மாநில கோரிக்கைக்கு எதிரி என்ற தோற்றம்உருவாகியுள்ளது.
தனி மாநிலம் அமைக்க உறுதியளித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியுடன் (டி.ஆர்.எஸ்) கூட்டணி அமைத்துசட்டசபை, மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. இப்போது மக்களை காங்கிரஸ்ஏமாற்றிவிட்டதாக டி.ஆர்.எஸ் போர்க் கொடி உயர்த்தியுள்ளது.
இந் நிலையில் மஜ்லிஸ் கட்சி புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. ஹைதராபாத்தில் பெரும் எண்ணிக்கையில்வசிக்கும் முஸ்லீம்களின் ஆதரவு பெற்ற இந்தக் கட்சி, ஹைதராபாத்தை தனி மாநிலமாக்க வேண்டும் என்றுகூறியுள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் ஒவைசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுசந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளாகியும் முஸ்லீம்கள் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஹைதராபாத்மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெரும் அளவில் முஸ்லீம்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதனால் ஹைதாராபாத் மற்றும் அதன் 50 கி.மீ. சுற்றுப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்.
தனி தெலுங்கானா போல இந்த மாநிலத்தை உருவாக்கவும் போராட்டம் நடத்தப் போகிறோம் என்றுகூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனி மாநில கோரிக்கையை முன் வைத்து ஆந்திர சட்டசபையில் கடந்த 4 நாட்களாக அமளியில்ஈடுபட்டு வந்த தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி எம்எல்ஏக்கள் 18 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications