பெங்களூர் சதாப்தி, ஜெயப்பூர் எக்ஸ்பிரசில்குண்டு புரளி-நடுவழியில் தமிழக போலீஸ் சோதனை
சென்னை:
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் சதாப்தி ரயிலிலும், ஜெய்ப்பூர்எக்ஸ்பிரசிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்துதிருவள்ளூரில் ஒரு ரயிலும் கும்மிடிப்பூண்டி அருகே இன்னொரு ரயிலும்நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் சோதனை செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் நேற்று மாலைசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதில் 300க்கும்மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ரயில்கள் புறப்பட்ட அரை மணி நேரத்தில்சென்னை ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்திற்கு போன் வந்தது.அதில் பேசிய நபர் அந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சதாப்திரயில் அங்கு நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் ரயிலை விட்டுவெளியேற்றப்பட்டனர்.
பின்னர் திருவள்ளூர் போலீசார், மற்றும் "பாம் ஸ்குவாட் போலீசார் வந்து இரண்டுமணி நேரம் ரயிலை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல்வெறும் புரளி என்று தெரிய வந்தது. பின்னர் பயணிகள் அனைவரையும்ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டு சென்றது.
அதே போல் சென்னையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு சென்றஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசிமிரட்டலையடுத்து அந்த ரயில் கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூரில் நிறுத்தப்பட்டது.
அதிலிருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு சோதனை நடந்தது.அதிலும் குண்டு ஏதும் இல்லை.
இதையடுத்து 9.30க்கு மணிக்கு ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications