அமெரிக்காவில் பெருகி வரும் ஆன்லைன் பாதிரியார்கள்!
வாஷிங்டன்:
அமெரிக்காவில், அதிகாரப்பூர்வ கத்தோலிக்க பாதிரியார்களுக்கு தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் பாதிரியார்களை ஏற்பாடு செய்து தரும் இணையதளம் பிரபலமாகியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாதிரியார்களுக்கு ஏகப்பட்டவிதிமுறைகள் உள்ளன. இவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஓரினச்சேர்க்கை பழக்கம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல கடுமையானவிதிமுறைகள் உள்ளன.இந்த விதிமுறைகளுக்கு உட்படாத பாதிரியார்கள் அதிகாரப்பூர்வ பாதிரியார்களாகஅங்கீகரிக்கப் படுவதில்லை. இப்படி அங்கீகரிக்கப்படாத பாதிரியார்களைஒருங்கிணைத்து இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை லூயிஸ் ஹேக்கட் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர்செலிபஸி இஸ் த இஸ்யூ என்ற அமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். காட்ஸ்எல்லோ பேஜஸ் என இந்த இணைய தளத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில்2,500 அங்கீகரிக்கப்படாத கத்தோலிக்க பாதிரியார்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் திருமணங்களை நடத்தி வைப்பது, இறுதிச் சடங்குகளை நடத்துவதுஉள்ளிட்டவற்றை செய்கின்றனர். திருமணங்களை நடத்தி வைக்க மட்டுமே இவர்கள்கட்டணம் பெறுகின்றனர். மற்றவற்றிற்கு கட்டணம் எதையும் பெறுவதில்லை.
அதிகாரப்பூர்வ பாதிரியார்களை நாடினால் அதிக செலவாகும் என்று நினைப்போர்இந்த ஆன்லைன் பாதிரியார்களை தேடி வருகிறார்கள். இவர்களிடம் சென்றால் செலவுகுறையும் என்பதே இதற்கு முக்கிய காரணம்.
இதுகுறித்து லூயிஸ் கூறுகையில், அதிகாரப்பூர்வ பாதிரியார்கள் செய்வதை விடஇயேசுவின் சேவையை நாங்கள் தான் முழுமையாக செய்து வருகிறோம். கடந்தஆண்டு 3,000 பேருக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளோம்.
கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது என்று உள்ள நிலையை மாற்றநாங்கள் கடுமையாகமுயற்சிக்கப் போகிறோம்.
இன்டர்நெட் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. மேலும்,பாதிரியார்களுக்குப் பற்றாக்குறையும் உள்ளது. அமெரிக்காவில் 27 சதவீதகத்தோலிக்கர்களுக்கு நிரந்தரமான பாதிரியார் இல்லை என்று ஆய்வு ஒன்றில்தெரியவந்துள்ளது.
பாதிரியார்களுக்கு வயதாகி வருகிறது. சில சர்ச்சுகள் பாதிரியார்கள் பற்றாக்குறைகாரணமாக மூடப்பட்டுள்ளது என்றார் லூயிஸ்.
நியூயார்க்கில் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க பாதிரியார்களுக்கு 500 டாலர்கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவின் மற்றமாநிலங்களில் இது குறைவாகவே உள்ளது.
1992ம் ஆண்டு இந்த இணைய தளத்தை லூயிஸ் நிறுவினார். அப்போது அவரதுதாயார் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்தார். அவருக்காக பிரார்த்தனைசெய்ய பாதிரியாரைத் தேடியபோது யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்தஇணையதளத்தை அவர் தொடங்கினார்.
இந்த இணையதள பாதிரியார் அமைப்பு, கத்தோலிக்க பாதிரியார்களை கண்டறிந்துஅவர்களை தங்களது அமைப்பில் சேர்க்கிறது. அவர்களுக்கு சான்றிதழும்கொடுக்கிறார்கள். பின்னர் அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.கல்யாணம் செய்து கொண்ட, ஓரினச் சேர்க்கை பழக்கம் உடைய பாதிரியார்களுக்கேஇவர்கள்முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணம் செய்து கொண்ட பாதிரியார்களை கத்தோலிக்க சர்ச்சுக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்ற போதிலும், திருமணமான பின்னர் பாதிரியாராகமாறியவர்களை ஏற்றுக்கொள்கிறது.
ரிச்சர்ட் ஹேசல்பாச் என்பவர் 13 ஆண்டுகள் பாதிரியாக இருந்த பின்னர் திருமணம்செய்து கொண்டார். இவர் கத்தோலிக்க சர்ச்சுகளின் கடுமையான விதிமுறைகளைசாடுகிறார். விவகாரத்து பெற்றோர், கர்ப்பிணிகள், ஓரினச் சேர்க்கை பழக்கம்உடையவர்கள் ஆகியோருக்கு இவர் திருமணம் செய்தது வைக்கிறார்.
மேலும், கத்தோலிக்க பாதிரியார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்குகவுன்சிலிங்கும் செய்கிறார். மேலும், தனது வீட்டிலிருந்தபடி பிரார்த்தனைகூட்டங்களை நடத்தி ரிச்சர்ட், சர்ச்சுக்கு வெளியே திருமணங்களை நடத்தி வைக்கிறார்.
இந்த வாடகை பாதிரியார்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இல்லினாய்ஸைச் சேர்ந்த ஜிம் மற்றும் மேரி ஆன் ஆகியோர், லூயிஸின்இணையதளத்தைப் பார்த்து பாப் ஸ்கேன்லான் என்ற பாதிரியாரை வாடகைக்குஅமர்த்தி அவர் மூலம் தங்களது திருமணத்தை நடத்தியுள்ளனர்.
இருவரும் கத்தோலிக்கர்கள். ஏற்கனவே திருணமான இருவரும் பின்னர் விவாகரத்துசெய்தனர். அதன் பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும்8 குழந்தைகள் உள்ளனவாம்.
கத்தோலிக்க பாதிரியார்களை நாடினால் தங்களது திருமணம் நடந்திருக்க வாய்ப்பேஇல்லை. எனவே தான் இந்த இணையதளத்தின் உதவியை நாடினோம் என்கிறார் கிம்.கடவுளுக்கும், நமக்கும் இடையே உள்ள உறவுதான் முக்கியம். இதில் விதிமுறைகள்,சட்டங்களுக்கு இடமில்லை என்கிறார் கிம்.
பாதிரியார் என்பவர் எப்போதும் பாதிரியார்தான், அவர் கல்யாணம் செய்துகொண்டாலும் கூட. அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கத்தோலிக்க சர்ச்சுகள்மறுக்கும் போது அதை நானே முன்வந்து செய்கிறேன், அவ்வளவு தான் என்கிறார்ரிச்சர்ட் ஹேஸிபாச்.
இந்த இணையதளமும் இதன் சேவையும் அமெரிக்காவில் பல சர்ச்சைகளைஉருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications