For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மத்திய தொகுதிக்கு அக். 11ல் இடைத் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மத்திய சட்டபேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 11ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் மரணமடைந்ததால் அந்தத்தொகுதி காலியானது.

6 மாதங்களுக்குள் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் இடைத் தேர்தல் நடத்துவதற்கானமுன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியது. முதல் கட்டமாக அங்கு வாக்காளர் பட்டியல்திருத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக இங்கு புகைப்பட வாக்காளர் பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் இறுதி செய்யபப்ட்ட நிலையில், தேர்தல் ஆணையர் நவீன்சாவ்லா மதுரை சென்று 2 நாட்கள்ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி திரும்பினார்.

இதையடுத்து இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத் தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல்: செப்டம்பர் 16.

மனு தாக்கலுக்கு கடைசி நாள்: செப்டம்பர் 23.

வேட்பு மனுக்கள் பரிசீலனை: செப்டம்பர் 25.

மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: செப்டம்பர் 27.

வாக்குப் பதிவு: அக்டோபர் 11.

வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 14.

மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தைவிதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள இலவச கலர் டிவி உள்ளிட்ட திட்டங்களை மதுரை மாவட்டத்தில் மட்டும்அமல்படுத்த முடியாது.

இதேபோல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது. புதியநலத்திட்டங்களை மதுரை மாவட்டத்தில் அறிவிக்க முடியாது.

சட்டசபை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் திமுக, அதிமுக இடையிலான முதல் பலப்பரீட்சை என்பதால், மதுரைமத்திய தொகுதி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள்:

மொத்த வாக்காளர்கள்: 1,34,913.

பதிவானவை: 94,226.

பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (திமுக) -43,185

எஸ்.டி.கே.ஜக்கையன் (அதிமுக) -35,992

சுந்தரராஜன் (தேமுதிக) - 12,038

கலர் டிவி-இலவச நில திட்டங்கள் ரத்து:

மதுரை மத்திய தொகுதியில் இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதால் தேர்தல் விதிகள் அமலுக்குவந்துவிட்டன. இதனால் கலர் டிவி, இலவச நிலம் வழங்கும் திட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிகள் அமலுக்குவந்துள்ன.

இதனால் மதுரை மாவட்டத்தில் எந்தவித புதிய திட்டங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள முடியாது.அதுபோல வளர்ச்சி பணிகளையும் அமல்படுத்த முடியாது. மத்திய அரசும் புதிய திட்டங்களை மாவட்டத்தில்கொண்டு வர இயலாது. எந்த அரசு விழாவையும் நடத்த முடியாது. அமைச்சர்கள் மற்ற பணிகளுக்காக அரசுகார்களில் மதுரை மாவட்டத்துக்குள் வர முடியாது. இலவச பொருட்கள் வழங்கவும் தடை விதிக்ப்பட்டுள்ளது.

எனவே மதுரை மாவட்டத்தில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டமும், 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டமும்நிறுத்தப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் இலவச கலர் டிவி பெற முதல் கட்டமாக 649 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலூர்தொகுதி, திருமங்கலம் தொகுதி, திருப்பரங்குன்றம் தொகுதி, சோழவந்தான் தொகுதி, சமயநல்லூர் தொகுதி,உசிலம்பட்டி தொகுதி ஆகிய 7 இடங்களில் உள்ள சமத்துவபுரங்களில் இந்த 649 பயனாளிகள் உள்ளனர்.

இடைத்தேர்தல் முடிந்த பிறது இவர்களுக்கு நவம்பர் மாதம் இலவச கலர் டிவியும், 2 ஏக்கர் நிலமும்வழங்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X