For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவச கலர் டிவிக்கள் வழங்கினார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சீபுரம்:

தமிழகத்தில் ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கிவைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள துண்டல் கழனி, கரசங்கால் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்இதற்கான விழா நடந்தது. விழாவில் கருணாநிதி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச கலர் டிவிகளைவழங்கினார்.

அப்போது கருணாநிதி பேசியதாவது,

அண்ணா பிறந்த இந்த மாவட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றானஇலவச கலர் டிவி வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது.

234 தொகுதிகள் இருந்தாலும் தனது தொகுதியில் நடைபெறுவது பெருமை என்று யசோதா குறிப்பிட்டார்.தேவகி-வாசுதேவருக்கு மகனாக கண்ணன் பிறந்தாலும் யசோதாவிடம் தான் வளர்ந்தான். அது போல எனதுதொகுதி சேப்பாக்கமாக இருந்தாலும் அண்ணா பிறந்த மாவட்டமான இந்த தொகுதியில் இந்த திட்டத்தைதொடங்கி இருக்கிறேன்.

இதை மற்ற வளர்ப்பு மகன் போல் இல்லாமல், வளமான, நாணயமான நல்ல வளர்ப்பு மகனாக வளர்க்க யசோதாபாடுபடுவார் என்று நம்புகிறேன்.

Karunanidhi with Stalin and Dhayanithi Maran

முதல் கட்டமாக இன்று 30,000 கலர் டிவி வழங்கப்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது அதில்கொஞ்சம் குறைந்து இப்போது 25,245 டிவிகள் இன்றும் நாளையும் வழங்கப்படுகின்றன.

இத்தோடு இதை நிறுத்தி விடாமல் அடுத்த பட்ஜெட் படிக்கும் முன் வரை தொடர்ந்து கலர் டிவி வழங்கப்படும்.நிதி எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள். ரூ. 750 கோடி இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றுபட்ஜெட்டிலேயே தெரிவித்து இருக்கிறோம்.

இன்றும் நாளையும் வழங்க ரூ. 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு இத்தனை கலர் டிவி வழங்க முடியும்என்றால், ரூ.750 கோடிக்கு 25 லட்சம் டிவி வழங்க முடியும். இதை 5 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவோம்.எதிர்க்கட்சிகள் இதை குறை கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தால்தான் ஆளுங்கட்சி உருப்படும்.

நண்பர்கள் ஆட்சி புரிவோரை இடித்து சொல்ல வேண்டும் என்று திருக்குறள் சொல்கிறது. எதிர்க்கட்சியில்அப்படிப்பட்ட நண்பர்கள் வாய்க்கவில்லை. எனவே தோழமை கட்சியாக இருந்தாலும், அதில் உள்ள நண்பர்கள்சொல்லும் அறிவுரைகளால் தான் ஒழுங்கான பாதையில் நடைபோட முடிகிறது.

இந்த 30,000 கலர் டிவிகள் தான் கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் (ஜெயலலிதா)சொல்வதைப் போல சிலபத்திரிகைகளிலும் எழுதுகிறார்கள். கல்யாண வீடுகளில் விருந்துக்கு வருபர்களுக்கு பந்தி பந்தியாக விருந்துஅளிப்பது போல படிப்படியாகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

இந்த மேடைக்கு வருவதற்கு கூட படிப்படியாக ஏறித்தான் வர வேண்டும். ஒரேயடியாக தாவ முடியாது. 25லட்சம், 30 லட்சம் டிவி மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் 5 ஆண்டுகளில் கலர் டிவி இல்லாத வீடுகளே இல்லைஎன்று சொல்லும் அளவுக்கு 1 கோடி பேருக்கு தேவை என்றாலும் நிச்சயம் டிவி இல்லாத அனைத்து வீடுகளுக்கும்டிவி வழங்குவோம்.

நாளை மறுநாள் பெரியார் பிறந்த நாளில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கும் திட்டத்தைதொடங்குகிறோம். ஏறத்தாழ 25,000 ஏக்கருக்கு மேல் பகிர்ந்து, பண்படுத்தி தரப்படுகிறது. அண்ணா,பெரியாரோடு நிறுத்தவில்லை. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை அனைத்துபள்ளியிலும் கல்வி எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என சட்டம் போட்டு இருக்கிறோம்.

ஜி.ஒ. (அரசாணை) போட்டால் மாற்றி விடுவார்கள். ஜி.ஒ என்றால் போ என்று அர்த்தம். அது போய் விடும்.எனவே தான் சட்டம் போட்டு இருக்கிறோம். நாங்கள் 3 விதமாக நிலம் வழங்குகிறோம். ஒன்று அரசுக்குசொந்தமான தரிசு நிலத்தை கொடுப்பது, இரணாடாவது தரிசு நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதை அரசேபண்படுத்தி கொடுப்பது, 3வது தனியார் நிலத்தையும் அவர்கள் விருப்பப்பட்டால் பண்படுத்தி கொடுப்பது. இந்த3 முறைகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து 5 ஆண்டுகளும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். படிப்படியாக நிலத்தை பண்படுத்தி நிலம் இல்லாதஏழைகளுக்கு வழங்கப்படும். மேற்கு வங்காளத்தில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்று நமதுமாநிலத்தின் இருந்து குழுவினர் சென்று பார்த்து வந்தனர். அங்கு ஒரளவுதான் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் அதை விட அதிகமான அளவு நிலம் வழங்கப்படும். அதற்காக பணியாற்ற இந்தஅரசு விருப்புகிறது. தயாநிதி மாறன் பேசும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழக அரசுக்கு நீங்கள்(மக்கள்) என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். நன்றியை எதிர்பார்த்து நான் எதையும்செய்யவில்லை. நீங்களாக நன்றி செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழினம், தமிழ் மானம் என்ற உணர்வு உண்டு. பெரியார், அண்ணா, காமராஜர்எல்லோரும் இந்த மண்ணுக்காக பாடுபட்டார்கள். இந்த மண்ணுக்குள்ளேயே இருக்கிறார்கள். நமது மனதிலும்இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன ஜாதி, மதி பேதமற்ற பகுத்தறிவுள்ள சமுதாயத்தை படைப்போம் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, அன்பரசன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பாமகதலைவர் ஜி.கே.மணி மற்றும் பலர் கலந்து கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X