• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக சட்டம்-ஒழுங்கு: கருணாநிதி திருப்தி

By Staff
|

சென்னை:

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை முன்பிருந்ததை விட மேம்பட்டிருப்பதாக முதல்வர் கருணாநிதி எனகூறியுள்ளார்.

கலெக்டர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. அப்போது கருணாநிதி கூறியதாவது,

தேர்தல் அறிக்கையில் மொத்தம் 177 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். 62 வாக்குறுதிகளைநிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். நிதி ஒதுக்கீடுதேவையில்லாத 74 வாக்குறுதிகளில், 45 வாக்குறுதிகளில் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் முதலாவது ஆண்டிலேயே 107 வாக்குறுதிகளை, அதாவது சுமார் மூன்றில் இரண்டுபங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம்.

நமது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பான செய்திகள்பிருந்ததைக் காட்டிலும் நிறைவளிக்கத்தக்க வகையில்அமைந்துள்ளது. உங்களது மாவட்டங்களில் பிரச்சனைக்குரிய இடங்கள், புதிய புதிய பிரச்சனைகளுக்குஉட்படுத்தப்படும் இடங்களை பற்றிய விவரங்களைச் சேகரித்து, எவ்வித அசம்பாவிதமும், எந்த நேரத்திலும்ஏற்பட்டுவிடாதபடி தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

தற்போது இலங்கையில் பதற்ற நிலை காரணமாக 12.01.2006 முதல் இதுவரை 13,044 இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக வந்துள்ளனர். அகதிகளாக வரும் தமிழர்களுக்கு உடுக்கை இழந்தவன் கை போல உதவிடுவது நமதுஉணர்வோடு கலந்து கடமையாகும். அதே நேரத்தில், அகதிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகளை நாம்நமது மண்ணில் அனுமதிக்கக் கூடாது.

சாலை விபத்தினால் குறைந்தது நாள் ஒன்றிற்கு 10 மனித உயிர்கள் பலியாகின்றன என்பது நம்மை பதைபதைக்கவைக்கும் சோகமாகும். காவல் துறையினரும், போக்குவரத்துக் துறையினரும் இணைந்து சோதனைச் சாவடிகள்அமைத்து வாகனத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுபவர்களின் ஓட்டுநர்உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்களைச் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டும், அமைதியாகவும், ஒழுங்காவும், அனைத்துத்தரப்பினரும் அச்சம் தவிர்த்து வாக்களித்திடும் வகையிலும் நடத்தி, மக்களாட்சியின் வேர்கள் ஆழமாகப் பரவிஅனைவர்க்கும் பலனளித்திடத் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்தின் எல்லா நிலைகளுலும்உருவாக்கிட வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 42 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. ஊராட்சி அளிவிலுள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களும் பஞ்சாயத்து அளிவிலானகூட்டமைப்பில் பதிவு செய்ய வேண்டுமென்பதை மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

சிக்குன் குனியா வைரஸைப் பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவமாணவியர், தொண்டு நிறுவனங்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அனைவரையும் ஒன்று திரட்டி, தடுப்புநடவடிக்கையாக மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடமாவட்ட ஆட்சியர்கள் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கிராம மற்றும் நகர்புற ஏழை எளிய மக்களுக்குப் பொங்கல் திருநாளில் இலவசமாக வேட்டி சேலை வழங்கும்திட்டம் 1990ல் இந்த அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 164 லட்சம் சேலைகள் மற்றும் வேட்டிகள்இலவசமாக வழங்கப்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு மைதானம், அய்யன் திருவள்ளுவர் நூலகம்,மேம்படுத்தப்பட்ட குளம், குடியிருப்புகளுக்கெல்லாம் தெரு விளக்குகள், முக்கிய பகுதிகளில் சோடியம் ஆவிவிளக்குகள், முக்கிய தெருக்களுக்கு சிமெண்ட சாலைகள், சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, காத்திருக்கக் கூடம்,விளக்க போன்ற வசதிகளுடன் கூடிய மயானம் என இந்த அடிப்படை வசிதகள் அணைக்கும் இல்லாத கிராமஊராட்சியே தமிழ்நாட்டில் இல்லை என்ற தகுதிமிக்க நிலையினை உருவாக்கிட நாம் உறுதி பூண்டுள்ளோம்.

நகர்ப்புற ஏழை எளியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வண்ணம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள்மற்றும் பெண்களுக்கு, கடன் வசதியுடன் கூடிய சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X