For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன நலம் பாதித்த சிறுவனை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் பிருத்விராஜின் (பப்லு) 11 வயது மன நலம் பாதித்த மகனை விமானத்தில்பயணிக்க அனுமதிக்க முடியாது என பெங்களூர் விமான நிலைய பாதுகாவலர்கள்மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளவர்நடிகர் பிருத்விராஜ். தற்போது ஜெயா டிவியில் சவால் என்ற நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வருகிறார்.

பிருத்விராஜ் 11 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட (ஆட்டிஸம்) மகன் உள்ளார். தனதுமனைவி மற்றும் மகனுடன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம்சென்றுள்ளார் பிருத்விராஜ். பெங்களூர் பயணத்தை முடித்து விட்டு சென்னைதிரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளார்.

அப்போது மன நலம் பாதித்தவர்களை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாதுஎன்று கூறி பிருத்விராஜின் மகனை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த பாதுகாவலர்கள்மறுத்துள்ளனர். இதனால் பிருத்விராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இது என்ன புதிதாக இருக்கிறது, மன நலம் பாதித்தவர்கள் விமானத்தில் செல்லக்கூடாது என்று ஏதாவது தடை உள்ளதா, உலகின் பல நாடுகளுக்கு நாங்கள்விமானத்தில் போயுள்ளோம். எங்குமே இப்படி ஒரு தடையை நாங்கள்சந்தித்ததில்லை என்று கூறி பிருத்விராஜ், பாதுகாவலர்களிடம் வாதாடியுள்ளார்.

ஆனால் அதை காதில் போட்டுக் கொள்ளாத அந்த பாதுகாவலர்கள், இப்படிப்பட்டகுழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்றால் பிற பயணிகளுக்கு பிரச்சினைஏற்படும்.

1937ம் ஆண்டு இதுதொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மொட்டையாகபேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிருத்விராஜ், உ உயர் அதிகாரிகளைதொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

இருந்தாலும் இதை இப்படியே விடக் கூடாது என்று முடிவு செய்த பிருத்விராஜ்அங்கிருந்து நகர மறுத்து விட்டார். இதற்கிடையே, பிருத்விராஜ் பயணம்செய்யவிருந்த விமான நிறுவனத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் பிருத்விராஜ்குடும்பத்தினர் தங்களது குழந்தையுடன் பயணம் செய்வதில் எங்களுக்கு எந்தஆட்சேபனையும் இல்லை என்று பாதுகாவல்ர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்தே பாதுகாவலர்கள் பிருத்விராஜ் குடும்பத்தினரை உள்ளே அனுமதித்தனர்.இந்த சம்பவம் குறித்து பிருத்விராஜ் மிகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மன நலம் பாதிப்பு என்பது ஒரு குறைபாடு. அதை மறைக்க முடியாது, நாங்கள்மறைக்கவும் விரும்பவில்லை. இதுபோன்ற குழந்தைகளை சிறப்புக் குழந்தைகள்என்று நாம் கூறுகிறோம். இப்படிப்பட்ட குழந்தைகள் மீது பரிவு காட்டி, அன்புகாட்டுவதை விட்டு விட்டு கொடூரமான எண்ணத்துடன் விமான நிலையபாதுகாவலர்கள் நடந்து கொண்டது வேதனைப்படுத்தியது.

பலரால் அறியப்பட்ட நடிகராக உள்ள எனக்கே இந்த நிலை என்றால், இதுபோன்றகுழந்தைகளைக் கொண்ட மற்ற பெற்றோர்களின் கதி என்ன ஆவது? கடந்த 11வருடமாக இத்தகைய சமூக அவமானங்களை நாங்கள் பலமுறை சந்தித்து விட்டோம்.

இப்படிப்பட்ட குழந்தைகள் குறித்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும். இந்தக்குழந்தைகள் மீது வெறுப்பு காட்டாமல் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். அதுஒன்றுதான் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க ஒரே வழி என்கிறார் பிருத்விராஜ்வேதனையுடன்.

சென்னைக்கு திரும்பிய பின்னர் விமான நிலைய பாதுகாவலர்கள் கூறியபடி 1937ம்ஆண்டு எந்த சட்டமாவது இயற்றப்பட்டதா என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனைகேட்டுள்ளார். ஆனால் அப்படி ஒரு சட்டமே கிடையாது எனவும், இந்த சம்பவம்மிகவும் அநாகரீகமானது, மனித உரிமை மீறல் என்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குதொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் வழக்கு தொடர பிருத்வி ராஜ் விரும்பவில்லையாம். அடிப்படை பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் எல்லாம் எப்படி விமான நிலைய பாதுகாப்புப் பணிக்குவந்தார்கள் என்று புரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X